ககதவால வம்சம்

From Wikipedia, the free encyclopedia

ககதவால வம்சம்
Remove ads

ககதவால வம்சம் ( Gahadavala dynasty ), கன்னோசியின் ககதவாலர்கள், என்றும் அறியப்படும் இவர்கள் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் இன்றைய இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் பகுதிகளை ஆண்ட ராஜபுத்திர வம்சமாகும். இவர்களின் தலைநகரம் சிந்து-கங்கைச் சமவெளியில் வாரணாசியில் அமைந்திருந்தது. மேலும் சிறிது காலத்திற்கு, இவர்கள் கன்யாகுப்ஜத்தை (நவீன கன்னோசி) கட்டுப்படுத்தினர்.

விரைவான உண்மைகள் ககதவால வம்சம், தலைநகரம் ...
Thumb
மார்தாண்டம் (சூரியக் கடவுள் அல்லது சூரியனின் ஒரு அம்சம்), ககதவால வம்சம், ராஜஸ்தான், கி.பி 12 ஆம் நூற்றாண்டு.

வம்சத்தின் முதல் மன்னரான சந்திரதேவன், கி.பி 1090 -க்கு முன்னர், காலச்சூரி அதிகாரத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு இறையாண்மை கொண்ட அரசை நிறுவினார். இவரது பேரன் கோவிந்தச்சந்திரனின் கீழ் இராச்சியம் அதன் உச்சத்தை அடைந்தது. அவர் சில கலாச்சூரி பிரதேசங்களை இணைத்து, கசனவித்துகளின் தாக்குதல்களைத் தடுத்து, பாலர்களுடன் போரிட்டார். கி.பி.1194 -இல், கோவிந்தச்சந்திரனின் பேரன் செயச்சந்திரன் கோரிகளால் தோற்கடிக்கப்பட்டார். இது வம்சத்தின் ஏகாதிபத்திய அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 12 ஆம் நூற்றாண்டில் ஜெயச்சந்திரனின் வாரிசுகள் தில்லி சுல்தானகத்தால் தோற்கடிக்கப்பட்டபோது இராச்சியம் இல்லாமல் போனது.

Remove ads

சான்றுகள்

Remove ads

Further reading

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads