கஞ்சே மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

கஞ்சே மாவட்டம்
Remove ads

காஞ்சே மாவட்டம் (Ghanche District), இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் காப்லு நகரம் ஆகும்.[1] காரகோரம் மலைத்தொடர்களால் சூழ்ந்த இம்மாவட்டத்தின் [2][3][4] பரப்பளவு 8,531 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,60,000 ஆகவுள்ளது.காஞ்சே மாவட்டத்தின் பெரும்பாலானோர் நூர்பக்சியா இசுலாமிய சமயப் பிரிவை பின்பற்றுகின்றனர். சிலர் சியா, சன்னி, வாகாபி இசுலாமியப் பிரிவுகளை பின்பற்றுகின்றனர். இதன் பெரும்பாலான மக்கள் பால்டி மொழி பேசுகின்றனர்.

விரைவான உண்மைகள் காஞ்சே ضلع گانچھے, நாடு ...
Remove ads

புவியியல்

Thumb
காஞ்சே மாவட்டத்தில் 7,821 மீட்டர் உயரம் கொண்ட மாஷர்புரும் எனப்படும் K-1 கொடுமுடி
Thumb
சியோக் ஆறு பாலத்திலிருந்து குர்சே கிராமத்தின் காட்சி

காஞ்சே மாவட்டத்தின் வடகிழக்கில் சீனா நாட்டின் கஷ்கர் மற்றும் கோத்தன் நகரங்களின் எல்லைப்பகுதியும், கிழக்கில் சியாச்சின் பனியாறும், தென்கிழக்கில் லே மாவட்டம், தென்மேற்கில் கார்மாங் மாவட்டம், மேற்கில் ஸ்கர்டு மாவட்டம், வடமேற்கில் சிகார் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. சியாச்சின் பனியாறு மற்றும் பல்திஸ்தான் பகுதிகளைப் பிரிக்கும் எல்லைக்கோடு இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது. இம்மாவட்டத்தில் சியோக் ஆறு பாய்கிறது.

Remove ads

மாவட்ட நிர்வாகம்

காஞ்சே மாவட்டம் 3 தாலுகாக்களைக் கொண்டது.

  • காப்புலு தாலுகா
  • தகோனி தாலுகா
  • மாஷர்புரும் தாலுகா

இம்மூன்று தாலுகாக்கள் 56 ஒன்றியக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சோர்பத் சமவெளியின் நான்கு கிராமங்களான துர்டுக், சாலுங்கா, தாங், மற்றும் தியாட்சி ஆகியவைகள், 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் போது இந்தியா கைப்பற்றியது.[5][6] [7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads