கடல்சார் தென்கிழக்காசியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடல்சார் தென்கிழக்காசியா (Maritime Southeast Asia) என்பது தென்கிழக்காசியாவின் பெருநிலத் தென்கிழக்காசியாவிற்கு எதிரானதும் புரூணை, கிழக்கு மலேசியா, கிழக்குத் திமோர், இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பீன்சை அடக்கிய வலயமாகும்.[1] இதனை சிலர் "தீவுத் தென்கிழக்காசியா" அல்லது "தனியான தென்கிழக்காசியா" என்றும் குறிப்பிடுகின்றனர். 19ஆம்-நூற்றாண்டில் "மலாய் தீவுக்கூட்டங்கள்" எனப்பட்டது பெரும்பாலும் இத்தகைய வலயத்தையே குறித்தது. இந்த வலயத்தின் மக்கள் இந்தோசீனாவிடமிருந்து வேறுபடுகின்றனர்; இவர்கள் பெரும்பாலும் சீனப் பண்பாட்டைத் தழுவாத ஆஸ்திரோனேசியர்களாக (மலாயோ-பாலினீசியர்) உள்ளனர். இவர்கள் பல்வகை கடல்சார் திறமைகளையும் பழங்குடி பண்பாட்டையும் வெளிப்படுத்துகின்றனர்.
Remove ads
கடல்சார் தென்கிழக்காசியாவிலுள்ள நாடுகள்
- மலேசியா - போர்னியோ தீவில் இரு மாநிலங்களின் பகுதி
- சிங்கப்பூர் - மலாய் தீபகற்பத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள சிறு தீவு.
- புரூணை - மலேசியாவையும் தென்சீனக் கடலையும் அடுத்துள்ள போர்னியோ தீவில் அமைந்துள்ள ஒரு நாடு.
- இந்தோனேசியா - சுமாத்திரா, போர்னியோ, சாவகத் தீவுகளை உள்ளடக்கியது; சில நேரங்களில் நியூ கினி தீவில் இந்தோனேசியாவின் பகுதியும்.
- பிலிப்பீன்சு - பிலிப்பைன் கடலை அடுத்துள்ள தீவுக்கூட்டம்
- கிழக்குத் திமோர் - 21ஆம் நூற்றாண்டில் முதலில் விடுதலைப்பெற்ற நாடு; இத்தீவை இந்தோனேசிய திமோருடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
- பப்புவா நியூ கினி - நியூ கினித் தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள நாடு; இதுவும் சிலநேரங்களில் கடல்சார் தென்கிழக்காசியாவின் அங்கமாக கருதப்படுகின்றது.
Remove ads
பண்பாட்டு அடையாளம்
இவர்களது பண்பாடு கோடெசு எழுதிய தென்கிழக்காசியாவின் இந்தியமய நாடுகளில் குறிப்பிடப்படும் "தென்கிழக்காசியத் தீவுகள்" போன்று "தொலைதூர இந்தியா" அல்லது பெரும் இந்தியாவின் பகுதி அங்கமாகவும்[2] பகுதி ஆஸ்திரோனேசியாஅல்லது ஓசியானியா போன்றும் உள்ளது; ஓசியானியாவின் இன,மொழி மற்றும் வரலாற்றை இவர்கள் கொண்டுள்ளனர்.[3]
மலாய் மொழி
மலாய் தீவுக்கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்களிடையே தொடர்பாடவும் தாய்மொழியாகவும் தேசிய மொழியாகவும் மலாய்சார் மொழிகளைக் கொண்டுள்ளனர்.
மலாய் மொழி நான்கு நாடுகளில் தேசிய மொழியாக உள்ளது:
"இனஞ்சார்" மொழியாக தாய்லாந்தின் நராதிவத்,பட்டாணி, யாலா மாநிலங்களில் "மலாய் பட்டாணி" அல்லது யாவி மொழி எனப்படும் மலாய் சார்ந்த மொழி பேசப்படுகின்றது. இது மலேசியாவின் கெலந்தன் மலாய் மொழியை ஒத்துள்ளது.
தென் பிலிப்பீன்சின் சுலு தீவுக்கூட்டத்தில் பேசப்படும் சுலு மொழி பல மலாய் மொழிச் சொற்களையும் சமசுகிருத சொற்களையும் கொண்டுள்ளது. தவிரவும் 17வது 18வது நூற்றாண்டுகளில் சுலு மற்றும் புருணை சுல்தானகங்கள் இடையே தொடர்பு இருந்தது. புருணை சுல்தானகத்திலும் மலேசியாவிலும் அலுவல்மொழியாக விளங்குகின்றது; மலேசியாவில் இது அலுவல்முறையாக பகாசா மலேசியா எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஆங்கிலம், மண்டரின் சீனமொழி, தமிழ் மொழியுடன் நான்காவது அலுவல்மொழியாக மலாய் உள்ளது. அவர்களது இலச்சினையில் முன்னோக்கி சிங்கப்பூர் எனப் பொருள்படும் "மஜுலா சிங்கப்பூரா" என்ற மலாய் மொழி வாசகம் உள்ளது. இந்தோனேசியாவில் இது பகாசா இந்தோனேசியா என்ற பெயரில் வழங்குகின்றது. இந்தோனேசியாவில் சுமாத்திரா மற்றும் போர்னியோவின் கலிமந்தானில் பல வட்டார மொழிகள் (பகாசா டேரா) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
Remove ads
மக்கட்தொகை
இந்த வலயத்தில் 540 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்; இந்த வலயத்தின் மிக்க மக்கள்தொகை மிகுந்த தீவாக சாவகம் உள்ளது. இங்கு வாழும் மக்கள் பெரும்பான்மையாக ஆஸ்திரோனேசிய உபப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் மேற்கு மலாய-பொலினீசிய மொழிகளைப் பேசுகின்றனர். தென்கிழக்காசியாவின் இந்த வலயத்தில் உள்ளவர்கள் பெருநிலத் தென்கிழக்காசியாவுடனும் பசிபிக்கின் மற்றபிற ஆஸ்திரோனேசிய மக்களுடனும் சமூக, பண்பாட்டுப் பிணைப்புகளைக் கொண்டுள்ளனர். இந்த வலயத்தில் உள்ளவர்கள் இசுலாம், கிறித்தவம், பௌத்தம், இந்து சமயம், மற்றும் மரபார்ந்த இயற்கை வழிபாடு சமயங்களைப் பின்பற்றுகின்றனர்.
இவற்றையும் காண்க
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads