கண சங்கம்

From Wikipedia, the free encyclopedia

கண சங்கம்
Remove ads

கண சங்கம் அல்லது கண இராச்சியம் அல்லது மக்கள் அரசு (Gana-Sangha or Gana-Rajya[1] பண்டைய இந்தியாவின் தற்கால உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மற்றும் நேபாளத்தின் தெராய் சமவெளிகளில், ஒரு குறிப்பிட்ட பிரபுத்துவ குடியரசின் ஒரு வகை குலக் கட்டமைப்பாகும்.[2] இந்த கண இராச்சியங்கள் எனும் மக்கள் குடியரசுகள் கிமு 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தது.

Thumb
ஏறத்தாழ கிமு 500ல் இருந்த சாக்கியர்கள், கோலியர்கள், மௌரியர்கள்,மற்றும் மல்லர்கள் இனக்குழுவினரின் கண சங்கங்கள் மற்றும் அருகமைந்த அரசுகள்
Remove ads

சொற்பிறப்பியல்

சமசுகிருதம் மற்றும் பாளி மொழிகளில் கணம் என்ற சொல்லிற்கு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் குழு என்று பொருள். பௌத்தத்தில் சங்கம் என்பதற்கு பிக்குகள் (ஆண் துறவிகள்) மற்றும் பிக்குணிகள் (பெண் துறவிகள்) ஆகியோரின் துறவற சமூகத்தைக் குறிக்கிறது.

கண சங்கம் என்ற சொற்றொடரை (ஆட்சி மூலம்) பழங்குடியினர் இனக்குழுவின் கூட்டம் என்று மொழிபெயர்க்கலாம். பண்டைய இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களை அடிக்கடி குறிப்பிடும் அங்குத்தர நிகாயம் போன்ற பண்டைய பௌத்த நூல்களில், மன்னராட்சிக்கு மாறாக ஒரு வகை பிரபுத்துவ மக்கள் குழு ஆட்சியை கண சங்கம் என்று குறிக்கிறது. .

பண்டைய இந்தியாவில் 16 பெரிய மகாஜனபாதங்களில் (மாநிலங்கள்), சாக்கியர்கள், கோலியர்கள், வஜ்ஜிகள் மற்றும் மல்லர்கள் ஆகிய இனக்குழுவினர் மட்டும் கண சங்கம் எனும் நிலப்பிரபுத்துவ குடியரசு ஆட்சியை பின்பற்றினர்.[3]

இந்த கண சங்கம் மக்கள் இராச்சியங்கள் அனைத்தும் இமயமலையின் அடிவாரத்தில், கிழக்கு உத்தரபிரதேசம், பீகார், நேபாளத்தின் தெராய் பகுதிக்கு அருகில் அமைந்திருந்தது.. இதற்கு நேர்மாறாக, ஒரு முடியாட்சி அரசாங்கத்தை (சாமராஜ்யம்) பின்பற்றிய மாநிலங்கள், பொதுவாக கங்கைச் சமவெளிகளில் அமைந்திருந்தது..

Remove ads

கண சங்கம் அல்லது கண இராச்சியத்தின் அமைப்பு

பண்டைய பௌத்த நூல்களின் ஆதாரங்களின்படி, கண சங்கத்தின் முக்கிய பண்புகள் ஒரு தலைவன் (கனா முக்யா) மற்றும் ஆலோசனைக் கூட்டம் (சங்கம்) ஆகும். இனக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நிலக்கிழாரான தலைவன் சத்திரியர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். கண இராச்சியத்தின் தலைவர், தனது நடவடிக்கைகளை ஆலோசனைக் குழுவுடன் ஒருங்கிணைப்பார். கண சங்கம் அவ்வப்போது கூடி, அனைத்து முக்கிய முடிவுகளையும் விவாதிக்கும். கௌதம புத்தர் காலத்தில், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் அனைவருக்கும் கண சங்கம் திறந்திருந்தது.[4][5]கண இராச்சியமானது நிர்வாகத் துறை மற்றும் நீதித்துறை என இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது.

Remove ads

வரலாற்றுப் பதிவுகள்

பண்டைய இந்தியாவில் கண இராச்சியங்கள் கிமு 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இருந்ததாக பொதுவாக நம்பப்படுகிறது. சாக்கியர்கள், கோலியர்கள், வஜ்ஜிகள் மற்றும் மல்லர்கள் ஆகிய இனக்குழுவினர் குடியரசு அமைப்பில் ஆட்சி செய்தனர் என்பதை அங்குத்தர நியாகா எனும் பௌத்த நூல் குறிப்பிடுகிறது.

பண்டைய இந்திய அரசியல் கையேடான அர்த்தசாஸ்திரம் நூலில் கண சங்கங்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய ஒரு அத்தியாயத்தை கொண்டுள்ளது. .

பேரரசர் அலெக்சாந்தருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிந்தைய கிரேக்க வரலாற்றாசிரியரான தியோடோரஸ் சிசிலி என்பவர் தனது நூலில் பண்டைய இந்தியாவில் சுதந்திரமான மற்றும் ஜனநாயக குடிஅரசுகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.[6] மக்கள் சங்கத்தின் மையப் பங்கை வலியுறுத்துகின்றனர். இதனால் அவற்றை ஜனநாயக நாடுகளாகக் கூறுகின்றனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads