திலௌராகோட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திலௌராகோட் (Tilaurakot ) நேபாள நாட்டின், நேபாள மாநில எண் 5ல் உள்ள கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள கிராமிய நகராட்சி மன்றம் ஆகும்.
1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 5,684 ஆகும்.[1]
கௌதம புத்தர் துறவறம் ஏற்பதற்கு முன் குடும்பத்தினருடன் 29 ஆண்டுகள் அரண்மனையில் வாழ்ந்த, பண்டைய கபிலவஸ்து நகரம் இக்கிராமத்தில் தான் இருந்தது என நேபாள நாட்டவர்கள் கருதுகின்றனர். இக்கிராமத்தின் மேற்கில் உள்ள லும்பினித் தோட்டத்தில் மாயாதேவி புத்தரைப் பெற்றெடுத்ததாக கருதுகின்றனர்.
Remove ads
வரலாறு
சீன பௌத்தப் பிக்குளான பாசியான் மற்றும் யுவான் சுவாங் கபிலவஸ்துவிற்கு புனித யாத்திரை மேற்கொண்ட குறிப்புகளின் அடிப்படையில்,[2][3][4][5], 19ம் நூற்றாண்டில் இக்கிராமத்திலும், இதனருகே உள்ள இந்தியாவின் பிப்ரவா கிராமத்திலும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
சில அகழ்வாராய்ச்சியாளர்கள் நேபாள நாட்டின் திலௌராகோட் கிராமமே கௌதம புத்தர் வாழ்ந்த பண்டைய கபிலவஸ்து நகரம் என கருதுகின்றனர்.[6] பிற அகழ்வாராய்ச்சியாளர்கள், நேபாளத்தின் திலௌராகோட் கிராமத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள பிப்ரவா கிராமமே புத்தர் அரண்மனையில் வாழ்ந்த பண்டைய கபிலவஸ்து நகரமாகும் எனக்கருதுகின்றனர்.[7][8]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads