கரம் மசாலா

From Wikipedia, the free encyclopedia

கரம் மசாலா
Remove ads

கரம் மசாலா (ஆங்கிலம்: Garam masala; இந்துசுத்தானி گرم مصالحہ / ( garm masala, "காரமான மசாலா")] என்பது இந்தியாவில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களின் கலவையாகும். இந்தியா, பாக்கித்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை மற்றும் கரீபியன் உணவு வகைகளில் இது பொதுவாகப் பயன்படக்கூடியது. கரம் மசாலாவினைத் தனியாக அல்லது மற்ற சுவையூட்டிகளுடன் கலந்தோ பயன்படுத்தலாம்.

Thumb
அரைத்த கரம் மசாலா

தேவையான பொருட்கள்

Thumb
கரம் மசாலாவிற்கான பொதுவான பொருட்கள் (மேல் இடதுபுறத்தில் இருந்து கடிகார திசையில்): கருப்பு மிளகுத்தூள், மெஸ், இலவங்கப்பட்டை, கிராம்பு, கருப்பு ஏலக்காய், ஜாதிக்காய் மற்றும் பச்சை ஏலக்காய்

கரம் மசாலாவின் கலவை இந்தியாவின் பிராந்திய ரீதியாக வேறுபடுகிறது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பிராந்திய மற்றும் தனிப்பட்ட சுவைக்கு ஏற்ப பல சமையல் வகைகள் உள்ளன.[1] மேலும் கரம் மசாலாவில் சேர்க்கப்படும் கூறுகள் வறுத்தெடுக்கப்பட்டு, பின்னர் ஒன்றாக அரைக்கப்படுகின்றன. இதன் பின்னர் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கப்படும்சேர்க்கப்படும்.

கரம் மசாலாவின் வழக்கமான இந்திய கலவை)[2] (அடைப்புக்குறிக்குள் இந்தி/உருது பெயர்களுடன்):

சில சமையல் குறிப்புகள்,[3] மசாலாப் பொருட்களைக் கலக்க வேண்டும், மற்ற மசாலாப் பொருட்களைத் தண்ணீர், புளிங்காடி அல்லது பிற திரவங்களுடன் சேர்த்து பசைபோல் கலக்க வேண்டும். சில சமையல் குறிப்புகளில் கொட்டைகள், வெங்காயம் அல்லது பூண்டு, அல்லது சிறிய அளவிலான நட்சத்திர சோம்பு, பெருங்காயம், மிளகாய், கல் பூ (டகாட்பூல் , லிச்சென் என அழைக்கப்படுகிறது) மற்றும் வால்மிளகு (கியூபெப்) ஆகியவை சேர்க்கப்படுகிறது. சீரான சுவைக்காக இந்த கலவையினை நன்றாகக் கலக்கவேண்டும்.[1] இந்த மசலாவினை நன்கு வறுத்து அதன் சுவை வெளியிடச் செய்யலாம். இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்கு, மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் ஏலக்காய், இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு பயன்படுத்தப்படலாம்.

பர்மிய மசாலா (မဆလာ பர்மிய கறிகளில் பயன்படுத்தப்படும் மசாலா கலவையானது பொதுவாக அரைக்கப்பட்ட இலவங்கப்பட்டை அல்லது காசியா, ஏலக்காய், கிராம்பு மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[4]

Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads