சீரகம்

From Wikipedia, the free encyclopedia

சீரகம்
Remove ads

சீரகம், அசை அல்லது நற்சீரகம் (தாவர வகைப்பாடு : Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது.காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.

விரைவான உண்மைகள் சீரகம், உயிரியல் வகைப்பாடு ...
Thumb
காய்ந்த சீரக விதைகள்
Remove ads

சீர்+அகம்=சீரகம்

சீர்+அகம்=சீரகம் (Cheerakam) என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

மருத்துவ குணங்கள்

இதன் புற்றுநோய் தடுக்கும் வல்லமை சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டு உள்ளது. ஒரு ஆய்வில் மிருகங்களில் நடத்திய பரிசோதனைகள் மூலம் ஈரல் மற்றும் வயிற்று பகுதிகளில் கட்டி வருவதை சீரகம் தடுக்கும் என தெரிய வந்து உள்ளது.

ஊட்டப்பொருட்கள்

ஊட்டப்பொருள்

விரைவான உண்மைகள் ஊட்ட மதிப்பீடு - 100 g, உணவாற்றல் ...

100 கிராம் சீரகத்தில் உடலுக்கு ஊட்டந்தரும் பல பொருட்கள் அடங்கியுள்ளன. இரும்புச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ ஆகியனவும் புரதம், நார்ப்பொருள், ஒற்றைபப்டி நிறைவுறு கொழுப்பு முதலியன நல்ல அளவில் உள்ளன.

Remove ads

கிருமிநாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது

சீரகத்திலிருந்து 56% Hydrocarbons,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப் பொருட்கள் பிரித்தெடுக்கப் படுகின்றன. இதில் Thymol –[anthelmintic againt HOOK WORM infections, and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமி நாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது.

சித்தர் பாடல்

எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும்
விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே

என சித்தர் பாடல் ஒலிக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads