சோலையம்மா (திரைப்படம்)

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

சோலையம்மா (திரைப்படம்)
Remove ads

சோலையம்மா (solaiyammaa) என்பது 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கஸ்தூரி ராஜா எழுதி, இயக்கி ஜோதி ராஜாவால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ராகுல், சுகன்யா, கரிகாலன் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவாவால் இயற்றப்பட்ட இசை மற்றும் கே. பி. அகமது ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் டிசம்பர் 11, 1992 அன்று வெளியானது.[1][2]

விரைவான உண்மைகள் சோலையம்மா, இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

சோலையம்மா (சுகன்யா) தாயற்ற பெண். தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள். அவர்களின் உறவினரான பால்ராஜ்ஜிற்கு (ராகுல்) திருமணம் செய்வதாக நிச்சயம் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலும் செய்தனர். வைரவன் (கரிகாலன்) ஊரில் பெரும் அராஜகத்தன்மையோடும் பெண்களின் கற்பை சூறையாடியும் வந்தான். ஒரு நாள் இரவு சோலையம்மாவின் வீட்டினுள் நுழைந்து சோலையம்மாவிடம் தவறாக நடக்க முயன்றான். ஆனால் சோலையம்மாவோ அவனை எதிர்த்து தாக்கினாள். இதனால் அவன் அங்கிருந்து தப்பித்து சென்றுவிடுகிறான். ஆனால் ஊர்க்காரர்கள் உட்பட சோலையம்மாவின் உறவினர்கள் எல்லாம் வைரவன் அவளை கற்பழித்து விட்டான் என்றே கூறுகிறார்கள். இதன் பின்னர் சோலையம்மாவின் தந்தை தற்கொலை செய்துக்கொள்கிறார். வைரவனோ அவளை தன்னுடன் ஒர் இரவு தங்கும்படி தொந்தரவு செய்கின்றான். அதன் பின்னர் சோலையம்மா என்ன செய்தாள் என்பதே மீதிக்கதையாகும்.

Remove ads

நடிகர்கள்

இசை

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். கஸ்தூரி ராஜா இத்திரைப்படத்தின் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.[3][4][5] [6][7]

மேலதிகத் தகவல்கள் எண், பாடல் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads