கருப்பையா வேலாயுதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கருப்பையா வேலாயுதம் (Karuppaiah Velayudam, 6 ஏப்ரல் 1950 - 13 அக்டோபர் 2015) இலங்கைத் தொழிற்சங்கத் தலைவரும், அரசியல்வாதியும், முன்னாள் இராசாங்க அமைச்சரும் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் கே, வேலாயுதம்K. Velayudamநா.உ மா.ச.உ, பெருந்தோட்டத் தொழிற்துறை இராசாங்க அமைச்சர் ...
Remove ads

இளமைக் காலம்

வேலாயுதம் கருப்பையா தேவர், ஆவத்தாள் ஆகியோரின் 11 பிள்ளைகளில் ஏழாவதாக உடப்புசல்லாவை கேர்கில்சு தோட்டத்தில் 1950 ஏப்ரல் 6 இல் பிறந்தார்.[2] தந்தை மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியாக இருந்தவர். பதுளை ஊவா கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.[2] தனலெட்சுமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரதீபராஜா, உருத்திரதீபன், தினேஷ்குமார், நிமலரூபன் என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர்.[2]

Remove ads

பணி

வேலாயுதம் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் அமைப்பாளராக ஆரம்பித்தார்.[3] இத்தொழிற்சங்கம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது.[4][5] இவர் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பல பதவிகளில் இருந்து பணியாற்றிய பின்னர் 1982 ஆம் ஆண்டில் அச்சங்கத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.[3] 2003 ஆம் ஆண்டில் அதன் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.[3][6] 2005 இல் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் உறுப்பினராக இருந்த தேசிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.[3] 2008 இல் கூட்டமைப்பின் இடைக்காலத் தலைவராக இருந்து பணியாற்றிய பின்னர் அக்டோபர் 2011 இல் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.[3]

வேலாயுதம் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 1988 ஊவா மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டார்.[7] பேர்சி சமரவீரவின் இறப்பை அடுத்து 1999 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[8]

2001 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[9] 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[10]

வேலாயுதம் 2004 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[11] 2009 மாகாணசபத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12] 2010 நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு கட்சி வேட்பாளர்களில் மூன்றாவதாக வந்து தெரிவாகவில்லை.[13] ஆனாலும், ஹரின் பெர்னாண்டோ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்ததை அடுத்து 2014 ஆகத்து 8 இல் வேலாயுதம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[14][15] 2015 அரசுத் தலைவர் தேர்தலை அடுத்து புதிதாக அமைக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் இவர் பெருந்தோட்டத் தொழிற்துறை இராசாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[16][17]

வேலாயுதம் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளராகச் சேர்க்கப்பட்டார்.[18][19] ஆனாலும், தேர்தலுக்குப் பின்னர் இவர் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை.[20][21]

Remove ads

மறைவு

வேலாயுதம், சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2015 அக்டோபர் 13 அன்று காலமானார்.[22]

தேர்தல் வரலாறு

மேலதிகத் தகவல்கள் தேர்தல், மாவட்டம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads