கர்லா குகைகள்

From Wikipedia, the free encyclopedia

கர்லா குகைகள்map
Remove ads

கர்லா குகைகள், (Karla Caves or Karle Caves) பண்டய இந்தியாவின் பௌத்த சமயக் குடைவரைக் குகைகள் ஆகும். மூன்றடுக்கு கொண்ட இக்குகைகளின் வளாகம் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணோவாலாவிலிருந்து 11 கீமீ தொலைவில் உள்ள கர்லி கிராமத்தின் மலையில் அமைந்துள்ளது.[1][2]

Thumb
கர்லா குகைகள், லோணாவ்ளா மகாராட்டிரா, இந்தியா
Thumb
கர்லா குகையின் சைத்தியத்தின் நுழைவாயில்
Thumb
கர்லா குகையின் சைத்தியத்தின் வெளிப்புறக் காட்சி
படிமம்:Worship at Karli in the days of Christ A.D. 20.jpg
கர்லா குகையின் சைத்தியத்தில் வழிபடும் கோலி இன மக்கள்

கர்லா குகைகள் புனே நகரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்குகைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பாதுக்காக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னங்களாக பராமரிக்கிறது.[3]

இப்பௌத்தக் குடைவரைக் கோயில்களை, மேற்கு சத்ரபதி மன்னர் நகபானர் கிபி 160ல் எழுப்பினார்.[4]

Remove ads

அமைப்பு

வரலாற்றுக் காலத்தின் துவக்கத்தில், மகாசங்க பௌத்தப் பிரிவினருடன் கர்லி குகைகள் தொடர்புறுத்திப் பேசப்படுகிறது.[5][6] கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கர்லி குகைகள், பௌத்தப் பிக்குகளின் விகாரைகளாக இருந்தது. இவ்விகாரை 15 மீட்டர் உயரமுள்ள இரண்டு பெருந்தூபிகளுடன் இருந்தது. அதில் ஒன்று சிதிலமைடந்துள்ளது. நன்குள்ள வேறு ஒரு தூபியில், மும்பைப் பகுதியின் கோலி இன மக்கள் வணங்கும் தெய்வமான இக்வீராவின் சிற்பம் காணப்படுகிறது.

Remove ads

கட்டிடக்கலை

கர்லா குகைகளின் குடைவரைக் கோயில்களின் வளாகம், ஒளியும், காற்றும் புகும்படியான கற்சன்னல்கள் கொண்டுள்ளது.[7]

இதன் முதன்மைக் குகையில் கிமு முதல் நூற்றாண்டில் பிக்குகள் பிரார்த்தனை செய்ய, 14 மீட்டர் உயரம், 45 மீட்டர் நீளம், கொண்ட மிகப்பெரிய சைத்தியம் அமைக்கப்பட்டுள்ளது. சைத்திய மண்டபத்தின் தூண்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிங்கம், யானை போன்ற விலங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

பிக்குகள் தங்குவதற்கான விகாரைகள் இக்குகை வளாகத்தில் குடையப்பட்டுள்ளது. குகைகள் வளைவுகளுடன் கூடிய நுழைவு வாயில்கள் கொண்டது. இங்குள்ள தூண்களில், இக்குடைவரைக் குகைகளை எழுப்பதற்கு நன்கொடை தந்தவர்களின் பெயர்கள் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

குகையின் வெளிமுகப்பில் உள்ள மரச்சிற்ப வளவுகளில் சிக்கலான விவரங்கள் உள்ளன. குகையின் மையப்பகுதியில் உள்ள பெரிய லாட வடிவ தோரணத்தில் அழகிய பூவணி வேலைபாடுகள் கொண்டுள்ளது. மூடிய கல் முகப்பிற்கும், தோரணத்திற்கும் இடையே, அசோகத் தூண் நிறுவப்பட்டுள்ளது.[1] மேலும் மழை நீரை தேக்கி வைத்து குடிப்பதற்கு, பாறையை குடைந்து கிணறு போன்று வெட்டப்பட்டுள்ளது.

Remove ads

படக்காட்சியகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads