கலைக்கோவில்

ஸ்ரீதர் இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

கலைக்கோவில்
Remove ads

கலைக் கோவில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் இசைத் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ராஜஸ்ரீ, நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் கங்கா ஆகியோர் தயாரித்தனர். இது ஓர் இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு கதையாகும். பொருளாதார ரீதியாக இது ஒரு தோல்விப்படம் ஆகும்.[2] இது வீணை இசைக்கலைஞனின் கதையை மையமாக கொண்டனது.

விரைவான உண்மைகள் கலைக் கோவில், இயக்கம் ...

இப்படத்தை பாக்கியலட்சுமி புரொடக்சன்ஸ் என்ற பதாகையின் கீழ் எம்.எஸ்.விஸ்வநாதன் (விசு என்ற பெயரில்), கங்கா ஆகியோர் தயாரித்தனர். படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தனர். கங்கா கலை இயக்குநராகப் பணியாற்றினார். ஸ்ரீதருடன் தொடர்ந்து பணியாற்றிய சித்ராலயா கோபு படத்தின் உதவி வசன எழுத்தாளராக பணியாற்றினார்.

கலைக் கோவில் 25 செப்டம்பர் 1964 அன்று வெளியானது. ஸ்ரீதரின் இயக்கம், எழுத்து, இசை, நடிகர்களின் நடிப்பு போன்றவை விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. வணிகரீதியாக தோல்விப் படம் என்றாலும் பி. சுசீலா மற்றும் எம். பாலமுரளிகிருஷ்ணா ஆகியோர் பாடிய "தங்கரதம் வந்தது வீதியிலே" பாடல் பிரபலமடைந்தது.

Remove ads

கதைச்சுருக்கம்

ஒரு ஏழை மனிதன் வீணை வித்வானாக ஆவதன் மூலம் ஏழ்மையில் இருந்து செல்வந்தனாக உயர்கிறான். ஆனால் அதை ஆடம்பரத்தாலிம், நாட்டியக்காரியிடமும், மதுவினாலும் இழக்கிறான்.

நடிகர்கள்

நடிகர்கள்
நடிகைகள்

தயாரிப்பு

காதலிக்க நேரமில்லை (1964) வெற்றிக்குப் பிறகு, அதன் தயாரிப்பாளரும் இயக்குனருமான சி. வி. ஸ்ரீதர், ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையை அடிப்படையான கதையில் தனது அடுத்த படத்தை இயக்கத்தை உருவாக்க முடிவு செய்தார். அவருடன் படங்களில் தொடர்ந்து பணியாற்றிய திரைப்பட எழுத்தாளர் சித்ராலயா கோபுவுடன், மெரீனா கடற்கரையில் சந்தித்து, அடுத்த படம் பற்றி விவாதிக்கையில், ஸ்ரீதர் அவர் ஏற்கனவே எழுதி முடித்த கதையை அவரிடம் சொன்னார், அது கலைக் கோவில் படமாக மாறியது. படத்தின் உதவி வசன எழுத்தாளராக கோபு நியமிக்கப்பட்டார். படத்தின் கதையைக் கேட்ட இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன், கங்காவுடன் இணைந்து பாக்யலட்சுமி புரொடக்சன்ஸ் என்ற பதாகையின் கீழ் படத்தைத் தானே தயாரிக்க முடிவு செய்தார்.[3] கங்கா கலை இயக்குனராகவும் பணியாற்றினார், அதே சமயம் தயாரிப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் பெயரானது சுவரொட்டிகள் தயாரிப்பாளர் என்ற இடத்தில் "விசு" என்று குறிப்பிடப்பட்டது. ஒளிப்பதிவை பாலு மேற்கொள்ள, படத்தொகுப்பை என். எம். சங்கர் மேற்கொண்டார்.[4][5] சிட்டி பாபு முத்துராமனுக்காக வீணை வாசித்தார்.[3][6] இப்படத்தில் எஸ். வி. சுப்பையா நடித்த பாத்திரத்துக்கு எஸ். வி. ரங்கா ராவை ஸ்ரீதர் தேர்வு செய்து ஒப்பந்தம் செய்து வைத்திருந்தார். படப்பிடிப்பின் முதல் நாளில் அவர் படப்பிடிப்புக்கு வராததால், அவருக்குப் பதிலாக எஸ். வி. சுப்பையாவை அப்பாத்திரத்தில் நடிக்கக் கேட்டார். ஆனால் முதலில் அந்த வேடத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டார், ஏனெனில் அவர் ஒட்டு தாடி, மீசையுடன் நடிக்கமாட்டேன் என்ற கொள்கை உடையவர். ஆனால் பிறகு அந்த பாத்திரத்தின் முக்கியத்துவம், பேசவேண்டிய உரையால் போன்றவற்றை ஸ்ரீதர் விளக்கிய பிறகு நடிக்க ஓப்புக்கொண்டார்.[6][7]

இசை

படத்திற்கான இசையை இரட்டை இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி (எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் டி. கே. ராமமூர்த்தி ஆகியோர்) அமைத்தனர். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[8] "தேவியர் இருவர்" பாடல் ஸ்ரீ எனப்படும் கர்நாடக ராகத்தில் அமைக்கப்பட்டது.[9][10] அதே சமயம் "தங்கரதம் வந்தது" பாடல் ஆபோகி இராகத்தில் அமைக்கப்பட்டது.[11][12] தங்கரதம் வந்தது பாடலுக்கு சியாம் வயலின் வாசித்தார்,[13] இது பிரபலமடைந்தது.[14] அவர் மேற்கத்திய பாடல்களுக்கு நன்கு வாசிப்பவராக இருந்ததால், பாரம்பரிய-கருப்பொருள் பாடலை வாசிப்பதில் அவர் சிரமப்பட்டார்.[15]

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads