கள்ளந்திரி
மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கள்ளந்திரி (ஆங்கிலம்: Kallandhiri) என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், கள்ளந்திரி ஊராட்சியில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கள்ளந்திரி, மதுரை - அழகர் கோவில் செல்லும் சாலையில், மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. கள்ளந்திரி வருவாய் கிராமம், மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 625301 ; தொலைபேசி குறியீடு எண் 04549 ஆகும். [1] கள்ளந்திரியில் ஐடிபிஐ வங்கிக் கிளையும்; அரசு மருத்துவ மனையும் உள்ளது.
Remove ads
அமைவிடம்
மதுரை - அழகர் கோவில் செல்லும் அழகர்கோயில் சாலையில், மதுரையிலிருந்து 17 கி.மீ. தொலைவில், அப்பன்திருப்பதிக்கு அடுத்து கள்ளந்திரி அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 219 உயரத்தில், 10.0383°N 78.2005°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இவ்வூர் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1,488 குடும்பங்களும்; 892.62 ஹெக்டேர் நிலப்பரப்பும் கொண்ட கள்ளந்திரி வருவாய் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 6,232 ஆகும். ஒடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 (20.07%) ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழைந்தகள் 706 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 77.13% ஆகும். இக்கிராமத்தின் மொத்த வேளாண் மற்றும் இதர தொழிலாளர்கள் 3,171 ஆகும். [2]அப்பன்திருப்பதியில் தமிழ், தெலுங்கு மற்றும் சௌராஷ்டிர மொழிகள் பேசப்படுகிறது.
Remove ads
அருகே அமைந்த கிராமங்கள்
- பொய்யக்கரைப்பட்டி
- அழகர் கோவில்
- அப்பன்திருப்பதி
- தொப்புலான்பட்டி
- நாயக்கன்பட்டி
- அமண்டூரபட்டி
- மஞ்சம்பட்டி
- பிள்ளையார்நத்தம்
வழிபாட்டுத் தலங்கள்
- வீரசின்னம்மாள் மற்றும் வீரநாகம்மாள் கோயில்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads