கவரா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கவரா (Gavara) என்பது தென்னிந்தியாவில் வாழும் நான்கு வெவ்வேறான, வேறுபட்ட மற்றும் முற்றிலும் தொடர்பில்லாத சமூகங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

கவரா பலிஜா

கவரா எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் பலிஜா சமூகத்தின் உட்பிரிவினராக உள்ளனர்.[1] பலிஜா என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் கவரை என்பதாகும்.[2] தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[3] கவரைகள், வீர வளஞ்சியர் தர்மத்தின் பாதுகாவலர்களாக இருந்தனர் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.[4] சோழன் பூர்வ பட்டயம் எனும் வரலாற்று நூலின்படி, சோழர் காலத்தில் செட்டிமையான பல குடிகளுக்கு தலைவர்களாக கவரை வளஞ்சியர்கள் நியமிக்கப்பட்டனர் என்பதை குறிப்பிடுகிறது.[5] வளஞ்சியர்கள், சிவபெருமானை கவரேசுவரன் என்ற பெயரில் வழிபட்டதன் காரணமாக கவரைகள் என்ற பெயரைப் பெற்றதாக வரலாற்றாளர்கள்‎ குறிப்பிடுகிறார்கள்.[6] வளஞ்சியர் என்பது தற்கால பலிஜா என்ற வணிக மக்களைக் குறிப்பதாகும்.[7] கவரைகள், பலிஜா சமூகத்துடன் திருமண உறவுகளை கொண்டுள்ளார்.[8] இவ்விரு சமூகத்தவர்களும் கௌரி விரதத்தைக் கடைபிடிப்பது வருகின்றனர்.[9]

கவரா கோமதி

கவரா என்பது கோமதி சமூகத்தின் உட்பிரிவின் பெயராகும்.[10] இம்மக்கள் கடற்கரையோர ஆந்திராவில் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.[11] தமிழ்நாட்டில் கோமதி சமூகத்தினர் கோமுட்டி செட்டியார் மற்றும் ஆரிய வைசியர் என்ற பெயரில் அறியப்படுகின்றனர்.

கவரா (அனகாபள்ளி)

கவரா எனப்படுவோர் ஆந்திர மாநில விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியில் காணப்படும் மிக சிறிய எண்ணிக்கையிலான சமூகமாகும்.[12] இவர்கள் கவரா பலிஜா சமூகத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

கவரா (கேரளம்)

கவரா எனப்படுவோர் கேரளாவின் எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் காணப்படும் துளு பேசும் சமூகமாகும்.[13] இவர்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், பட்டியல் பிரிவில் உள்ளனர்.[14] இவர்கள் கவரா பலிஜா சமூகத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads