காசெகெம்வி

எகிப்தின் இரண்டாம் வம்சத்தின் இறுதி மன்னர் From Wikipedia, the free encyclopedia

காசெகெம்வி
Remove ads

காசெகெம்வி (Khasekhemwy) பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால அரசமரபின் இரண்டாம் வம்சத்தின் மன்னர்களில் 12-வதும் மற்றும் இறுதியானவரும் ஆவார். இவர் எகிப்தை கிமு 2690 முதல் கிமு 2670 முடிய 18 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் மேல் எகிப்தில் சூனெத் எல் செபிப் எனுமிடத்தில் பெரிய அளவில் களிமண் செங்கல் கோட்டையை நிறுவினார். மேலும் நெக்கென், சக்காரா மற்றும் அபிதோஸ் நகரங்களில் கோட்டைகளை நிறுவினார். மேலும் இவர் தனக்கான சிலையை தானே நிறுவிக்கொண்டவர். இவரது கல்லறை அபிதோஸ் நகரத்தில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் Khasekhemwy, எகிப்தின் பாரோ ...

மன்னர் காசெகெம்வி ஓரசு மற்றும் சேத் கடவுள் சின்னங்களை கொண்டிருந்தார்.[3] இம்மன்னர் தனக்கான பெரிய கல்லறையை 58 அறைகளுடன், 70 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலத்தில் அபிதோஸ் நகரத்தில் சுண்ணாம்புக் கற்களால் நிறுவிக்கொண்டவர். இவர் வடக்கு எகிப்தின் எதிரிகளை வேட்டையாடி, நெக்கென் நகரத்தை தனது இராச்சியத்தின் தலைநகராகக் கொண்டவர் எனக்கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகிறது. [4]

இவரது மகன் ஜோசெர் மூன்றாம் வம்சத்தை நிறுவி பழைய எகிப்திய இராச்சியத்தை ஆட்சி செய்தவர் ஆவார்.

மன்னர் காசெகெம்வி கட்டிய கோட்டை
Thumb
Thumb
அபிதோஸ் நகரத்தில் மன்னர் காசெகெம்வி கட்டிய கோட்டை, ஆண்டு கிமு 2700
Remove ads

இதனையும் காண்க

ஆதார நூற்பட்டியல்

விரைவான உண்மைகள்

மேற்கோள்கள்

    ஊசாத்துணை

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads