காந்தன் (சந்தேல வம்சம்)
சந்தேல மன்னன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காந்தன் (Ganda) 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவை ஆண்ட சந்தேல வம்சத்தின் அரசனாவான். செகசபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்டு ஆட்சியாளராக இருந்தான். இவனது ஆட்சியின் சரியான காலம் நிச்சயமற்றது. ஆனால் தோராயமாக பொ.ச. 999-1002 என தேதியிடப்பட்டுள்ளது. [1]
Remove ads
வரலாறு
காந்தனால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இவ்னது பெயர் (காந்த-தேவன் என) இவனது வாரிசுகளால் வெளியிடப்பட்ட பின்வரும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது: [2]
- பரமார்த்தி தேவனால் வெளியிடப்பட்ட மகோபா கல்வெட்டு
- மதனவர்மனின் மவூ கல்வெட்டு
- கீர்த்திவர்மனின் அசய்கர் கல்வெட்டு
- போசவர்மனின் ஆட்சியின் போது வெளியிடப்பட்ட அசய்கர் பாறைக் கல்வெட்டு
இந்தக் கல்வெட்டுகளில் உள்ள காந்தன் பற்றிய தகவல்கள் வரலாற்று மதிப்புடையவை அல்ல. [3] அவை பெரும்பாலும் இவனை வெல்ல முடியாதவன் என்று அழைப்பது அல்லது "பூமியின் ஒரே ஆளுமை" என்று கூறுவது போன்ற புகழ்ச்சியான விளக்கங்களையேக் கொண்டிருக்கின்றன. [4]
Remove ads
தொழில்
காந்தன், தங்கனுக்குப் பிறகு சந்தேல மன்னனாகப் பதவியேற்றான். [5] இவனது வாரிசான வித்யாதரனைப் பற்றிய தகவல்களின் பகுப்பாய்வு, காந்தன், தான் மரபுரிமையாகப் பெற்ற பிரதேசத்தை பராமரிக்க முடிந்தது என்று கூறுகிறது. [5] மவூ கல் கல்வெட்டின் படி, தங்கனின் முதலமைச்சர் பிரபாசன் காந்தனின் ஆட்சியின் போது பதவியைத் தக்க வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. அசய்கர் கல்வெட்டுகள் சசுகா என்ற காயாசுதர் காந்தனின் மற்றொரு முக்கிய அதிகாரி என்று கூறுகின்றன. [6]
1970கள் வரை, ஆர். கே. தீக்சித் போன்ற அறிஞர்கள் இவனது ஆட்சியின் முடிவை பொ.ச. 1015இல் எழுதினர். [4] இருப்பினும், பின்னர், வித்யாதரனின் இராணி சத்யபாமாவின் செப்புத் தகடு குண்டேசுவரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு 1004 தேதியிட்டது. இது வித்யாதரன் ஏற்கனவே பொ.ச.1004 இல் ஆட்சி செய்ததை நிரூபிக்கிறது. இதன் அடிப்படையில், எசு. கே. சுல்லேரி காந்தனின் ஆட்சியின் முடிவு 1002 என்று குறிப்பிடுகிறார். [7] [8]
சில முந்தைய வரலாற்றாசிரியர்கள் இவன் குறைந்தது 1018 வரை ஆட்சி செய்ததாக நம்பினர். ஆர். கே. தீக்சித், 1008இல் பெசாவரில் கசினியின் மகுமூது தோற்கடிக்கப்பட்ட இந்துக் கூட்டமைப்பிற்குப் பங்களிப்பை வழங்கிய கலிஞ்சர் மன்னருடன் தங்கனை அடையாளம் காட்டினார். [9] 1018 இல், கசினி மகுமூது கன்னோசி மீது படையெடுத்தான். அபோது ஆண்ட அரசன் (ஒருவேளை இராச்சியபாலன்) நகரத்தை விட்டு வெளியேறினான். இதனால் கசனவித்துகளின் இராணுவம் நகரைச் சூறையாட அனுமதித்தது. பெரிசிதா (16 ஆம் நூற்றாண்டு), நந்தா போன்ற பிற்கால முசுலிம் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, கசுராகோவின் மன்னன் கன்னோசி மன்னனை அவனது கோழைத்தனத்திற்கு தண்டனையாகக் கொன்றான் எனத் தெரிகிறது. சில பிரிட்டிசு கால அறிஞர்கள் "நந்தா" என்பது காந்தனின் எழுத்துப்பிழை என்று அடையாளம் கண்டுள்ளனர். பெரிசுதாவை விட முந்தைய முசுலிம் வரலாற்றாசிரியரான அலி இப்னு அல்-ஆதிர் (12 ஆம் நூற்றாண்டு), கசுராகோவின் மன்னரை "பிடா" என்று பெயரிட்டார். இது "வித்யா" (அதாவது, காந்தனின்]] வாரிசான [[வித்யாதரன் (சந்தேல வம்சம்)|வித்யாதரன்). பிற்கால முசுலிம் வரலாற்றாசிரியர்கள் இதை "நந்தா" என்று தவறாகப் படித்திருக்க வேண்டும். மேலும், மகோபாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, வித்யாதரன் கன்னோசி ஆட்சியாளரை தோற்கடித்ததாகக் கூறுகிறது. இதன் அடிப்படையில், காந்தனின் ஆட்சியானது பொ.ச.1018க்கு முன்னர், அவனது வாரிசு கன்னோசி ஆட்சியாளரைத் தோற்கடித்தபோது முடிவடைந்தது என்று ஊகிக்க முடிகிறது. [5] [9]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads