காமரூபம்

From Wikipedia, the free encyclopedia

காமரூபம்map
Remove ads

காமரூப பிரதேசம் (Kamrup region), தற்கால வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றுக்கு வடக்கில், மானஸ் ஆற்றுக்கு கிழக்கில், போர் ஆற்றுக்கு மேற்கில் உள்ள பிரதேசம் ஆகும். காமரூப பிரதேசம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது நிறுவப்பட்ட காமரூப மாவட்டத்தின் பகுதியாகும்.[1] தற்போது காமரூப மாவட்டத்தின் நகர்ப்பகுதிகளைக் கொண்டு காமரூப் பெருநகர் மாவட்டம் என்றும், கிராமியப் பகுதிகளைக் கொண்டு காமரூப் ஊரக மாவட்டம் என்றும் பிரித்துள்ளனர். காமரூப பிரதேசம் பண்டைய காலத்தில் பிராக்ஜோதிச நாடு, காமரூப பேரரசு, அகோம் பேரரசு மற்றும் காமதா இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள் காமரூபம், இராச்சியங்கள் ...
Thumb
காமரூபத்தின் காமாக்யா கோவில்
Thumb
காமரூபத்தின் மதன் காமதேவன் கோயில்
Remove ads

பெயர்க் காரணம்

காளிகா புராணத்தில் சிவபெருமானின் சாபத்தால் சாம்பலான காம தேவன், ரதியின் தவத்தால், காமரூப பிரதேசத்தில் காமதேவன் மீண்டும் தன் உடலைப் பெற்ற தலம் எனக்கூறுகிறது.[2]காமதேவன் பெயரில் இப்பிரதேசததிற்கு காமரூபம் எனப்பெயராயிற்று.

காமரூப பேரரசு(350–1140)

கிபி 350 முதல் 1140 வரை காமரூப பேரரசு தற்கால அசாமின் காமரூப பிரதேசத்தை ஆட்சி செய்தது.[3] இப்பேரரசினர் பிராக்ஜோதிசம், குவகாத்தி, திஸ்பூர் மற்றும் துர்ஜெயம் ஆகிய நகரங்களை தலைநகராகக் கொண்டு ஆண்டனர். இப்பேரரசில் தற்கால அசாமின் பிரம்மபுத்திர சமவெளி, பூடான், வங்காளம் மற்றும் பிகாரின் சில பகுதிகள் இருந்தன.[4]மகாபாரத காவியத்தில் ஜோதிஷ்புரம் நகரத்தைப் பற்றியும், அதனை ஆண்ட மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. புவியியல் மற்றும் வரலாற்று அறிஞர் தாலமியின் குறிப்புகளில், இப்பேரரசின் மக்களை கிராதர்கள் எனப்படும் மலைவாழ் மக்கள் எனக்குறிப்பிடுகிறார்.[5]அசோகரின் அலகாபாத் தூண்களில் காமரூபம் மற்றும் தேவா நாட்டை ஆண்ட மன்னர்களை பிராத்யாந்த நிரிபதிகள் எனக் குறிப்பிட்டுள்ளது.

காமதா இராச்சியம் (1250-1581)

கிபி 13ஆம் நூற்றாண்டில் காமரூப பிரதேசத்தை காமதா இராச்சியத்தினர் ஆண்டனர்.[6] or sometimes as Kamata-Kamrup.[7] காமதா இராச்சியத்தின் கீழ் தற்கால அசாமின் காமரூப் பெருநகர் மாவட்டம், காமரூப் ஊரக மாவட்டம் , தர்ரங் மாவட்டம், மேற்கு வங்காள மாநிலத்தின் கூச் பெகர் மாவட்டம், வங்காளதேசத்தின் வடக்கு மைமன்சிங் கோட்டப் பகுதிகள் இருந்தது.[8]முகிசுதீனின் படையெடுப்பால் காமதா இராச்சியம் உலுக்கப்பட்டது. இதனால் காமரூப இராச்சியத்தின் தூரக் கிழக்கில் சுதியா இராச்சியம், கச்சாரி இராச்சியம் மற்றும் அகோம் இராச்சியங்கள் தோன்றியது.

கோச் ஹாஜோ (1581-1612)

கிபி 1581ல் காமதா இராச்சியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு காமதா இராச்சியம் ரகுதேவ் கட்டுப்பாட்டில் சென்றது. அப்பகுதிக்கு கூச் ஹோஜா இராச்சியம் எனப்பெயரிட்டார். முகலாயர்கள் வங்காள மாகாணத்தை நிறுவிய போது, கூச் பெகர் இராச்சியத்தினர் முகலாயர்களுடன் கூட்டு சேர்ந்து, 1615இல் ரகுதேவின் மகனின் பரிசித்துவின் கூச் ஹோஜா இராச்சியத்தை வெற்றி கொண்டனர்.

சர்க்கார் காமரூப் (1612-1682)

முகலாயர்கள் காமரூபத்தை நான்கு மாவட்டங்களாகப் பிரித்தனர்.[9]மேலும் காமரூப பிரதேசத்தின் பெயரை முகலாய இளவரசரான ஷா சூஜாவின் பெயரில் சூஜாபாத் எனப்பெயரிட்டனர்.[10]

அகோம் பேரரசின் மேலாதிக்கத்தில் (1682-1820)

1682இல் இதாகுலி போரில் முகலாயர்களை வென்ற அகோம் இராச்சியத்தினர் சர்க்கார் காமரூபப் பகுதிகளைப் கைப்பற்றி ஆண்டனர்.

பர்மிய கோன்பவுங் பேரரசில் (1821-1824)

மியான்மரின் பர்மிய கோன்பவுங் பேரரசினர் காமரூப பிரதேசத்தைக் கைப்பற்றி 1821 முதல் 1824 முடிய ஆண்டனர்.

Remove ads

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் (1833–1947)

1824இல் தொடங்கிய முதல் ஆங்கிலேய பர்மியப் போரில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் காமரூபப் பிரதேசத்தை வெற்றி கொண்டு புதிய காமரூப மாவட்டத்தை நிறுவினர்.

Thumb
இந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்தி, வடக்கு குவகாத்தி

நவீன காமரூப பிரதேசம்

1947 இந்திய விடுதலைக்குப் பிறகு 1983இல் காமரூப மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. நகர்புறங்கள் கொண்ட பகுதியை காமரூப் பெருநகர் மாவட்டம் மற்றும் கிராமப்புறங்கள் கொண்ட பகுதியை காமரூப் ஊரக மாவட்டம் எனப்பிரித்தனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads