காமாரெட்டி மாவட்டம்

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

காமாரெட்டி மாவட்டம்
Remove ads

காமாரெட்டி மாவட்டம் (Kamareddy district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3][4]தெலங்கானா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள நிசாமாபாத் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு, அக்டோபர், 2016-இல் காமாரெட்டி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காமாரெட்டி நகரம் ஆகும். காமாரெட்டி நகரத்தில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது.

Thumb
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
விரைவான உண்மைகள் காமாரெட்டி மாவட்டம் కామారెడ్డి జిల్లాکاماریڈی ضلع, நாடு ...
Thumb
காமாரெட்டி மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள்
Remove ads

புவியியல்

3,652 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[1] காமாரெட்டி மாவட்டத்தின் வடக்கில் நிசாமாபாத் மாவட்டம், கிழக்கில் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், தென்கிழக்கில் சித்திபேட்டை மாவட்டம், தெற்கில் சங்கர்ரெட்டி மாவட்டம் மற்றும் மேடக் மாவட்டங்களும், மேற்கில் மகாராட்டிரத்தின் நாந்தேட் மாவட்டம், தென்மேற்கில் கர்நாடகாவின் பீதர் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காமாரெட்டி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 9,72,625 ஆகும்.[1][5] இம்மாவட்ட மக்கள் தெலுங்கு மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம்

காமாரெட்டி மாவட்டம், காமரெட்டி, பன்ஸ்வாடா மற்றும் எல்லரெட்டி என மூன்று வருவாய் கோட்டங்களையும், 22 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[1][6][7] இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் என். சத்தியநாராயனா ஆவார்.[8]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads