காம்பே வளைகுடா

From Wikipedia, the free encyclopedia

காம்பே வளைகுடா
Remove ads

காம்பே வளைகுடா (Gulf of Khambhat) என்று வரலாற்று ரீதியாக அறியப்படும் காம்பத் வளைகுடா, இந்தியாவின் அரேபிய கடல் கடற்கரையில் உள்ள ஒரு விரிகுடா ஆகும். மும்பைக்கு வடக்கே குசராத்து மாநிலம் மற்றும் டையூ தீவின் எல்லையாக இது உள்ளது.[1] காம்பே வளைகுடா வடக்கில் சுமார் 200 கி.மீ. (120 மைல்) நீளம், 20 கி.மீ. (12 மைல்) அகலம் கொண்டும் தெற்கில் 70 கி.மீ. (43 மைல்) அகலமும் கொண்டும் அமைந்துள்ளாது. குசராத்து மாநிலத்தில் பாய்கின்ற முக்கிய நதிகளான நர்மதா, தபதி, மாகி மற்றும் சபர்மதி ஆகிய நதிகள் காம்பே வளைகுடாவில் வளைகுடாவில் முகத்துவாரங்களை உருவாக்குகின்றன.[2]

Thumb
காம்பே வளைகுடா, (நாசா வின் செயற்கைக்கோள் படம்)
Thumb
காம்பே வளைகுடா (வடக்கு பகுதி) 1896
Thumb
காம்பே வளைகுடா (தெற்கு பகுதி) 1896

காம்பே வளைகுடா கத்தியவார் தீபகற்பத்தை குசராத்தின் தென்கிழக்கு பகுதியிலிருந்து பிரிக்கிறது.[3][4][5]

காம்பே வளைகுடாவின் குறுக்கே 30-கிலோமீட்டர் (19 மைல்) அணை, கல்பசார் திட்டம் என்ற பெயரில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.[6]

Remove ads

வனவிலங்குகள்

காம்பே வளைகுடாவின் மேற்கில், கிர் வன தேசிய பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், கத்தியவார் அல்லது சௌராசுட்டிரா பகுதியில் ஆசிய சிங்கங்கள் வாழ்கின்றன.[3][7] வளைகுடாவின் கிழக்கே, தாங்குசு காடு மற்றும் குசராத்து, மகாராட்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள சூல்பனேசுவர் காட்டுயிர்க் காப்பகத்தில் வங்காளப் புலிகள் வாழ்கின்றன.[8]

காம்பே வளைகுடாவை சுற்றியுள்ள பகுதிகள்

Thumb
காம்பே வளைகுடாவை சுற்றியுள்ள பகுதிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads