கிர் சோம்நாத் மாவட்டம்
குசராத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிர் சோம்நாத் மாவட்டம் (Gir Somnath district) வேராவல் நகரை தலைமையிடமாகக் கொண்டு, 15-08-2013ஆம் நாளில் புதிதாக துவக்கப்பட்ட தேவபூமி துவாரகை மாவட்டம் உட்பட ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். [1] ஜூனாகாத் மாவட்டத்தின் கிர் தேசியப் பூங்கா மற்றும் சோம்நாத் வருவாய் கோட்டம் போன்ற சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட புதிய மாவட்டம் இது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வேராவல் ஆகும். இம்மாவட்டத்தில் 12 ஜோதிர் லிங்க கோயில்களில் ஒன்றான சோமநாதபுரம் கோயில் உள்ளது.


Remove ads
கிர்சோம்நாத் மாவட்டத்தின் நிலவியல்
கிர்சோம்நாத் மாவட்டம், குசராத்து மாநிலத்தின் மேற்கே, சௌராஷ்ட்டிர தீபகற்பத்தின் தென் மேற்கே, காம்பே வளைகுடா பகுதியில், அரபுக் கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரை மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கே போர்பந்தர் மாவட்டம். தெற்கே காம்பே வளைகுடா, மேற்கே அரபுக்கடல், கிழக்கே ஜூனாகாத் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம்
37,75 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிர் சோம்நாத் மாவட்டம் வேராவல் மற்று உனா என 2 வருவாய் கோட்டங்கள், 6 வருவாய் வட்டங்கள் மற்றும் 345 கிராம ஊராட்சிகளும் கொண்டது. [2]
வருவாய் வட்டங்கள்
- உனா வட்டம்
- கொடினார் வட்டம்
- சுத்ரபாதா வட்டம்
- வேராவல் வட்டம்
- தலாலா வட்டம்
- கிர்கத்தா வட்டம்
மக்கள்தொகை
37,75 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 9,46,790 ஆகும் (2011, மக்கள்தொகை கணக்கெடுப்பு). இம்மாவட்டம் கொடிநார், உன்னா, தலாலா மற்றும் சுத்ரபாதா எனும் நான்கு நகராட்சிகளையும், 345 கிராமங்களையும் கொண்டது.[3]
கிர்சோம்நாத் மாவட்ட முதன்மைத் தொழில்கள்
சுற்றுலா, மீன் பிடித்தல், பெரிய மீன்பிடி படகுகள் கட்டுதல், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், கடல்சார் உணவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், சிமெண்ட், வேதியல் பொருட்கள் மற்றும் செயற்கை நூல் உற்பத்தி தொழிற்சாலைகள் ஆகியவைகள் கிர்சோம்நாத் மாவட்டத்தின் முதன்மைத் தொழில்களாகும்.
கிர்சோம்நாத் மாவட்ட கடற்கரை
கிர்சோமநாத் மாவட்ட கடற்கரையில் உள்ள பிரபாச பட்டினம் வணிக நோக்கில் உள்ள சிறுபகுதி. இப்பகுதிகள் இன்றும் இளமையுடன் உள்ளது.
போக்குவரத்து
இரயில் இருப்புப்பாதை போக்குவரத்து
கிர்சோம்நாத் மாவட்டத் தலைமையிடமான வேராவல் ஒரு முதன்மையான தொடருந்து சந்திப்பு நிலையம் ஆகும். இந்நகரம் இருப்புப் பாதையால் நாட்டின் அகமதாபாத், ராஜ்கோட், உஜ்ஜைன், வதோதரா, புனே, சென்னை, புதுதில்லி, போபால், மும்பை, ஜபல்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.[4]
சாலைப் போக்குவரத்து
சோம்நாத், மாநிலத்தின் இதர முதன்மையான பகுதிகளான அகமதாபாத், ராஜ்கோட், சூரத்து, பவநகர், புஜ், ஜூனாகத், காந்திநகர் மற்றும் துவாரகை ஆகிய இடங்கள் சாலைப் போக்குவரத்து, பேருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது.
Remove ads
பார்க்க வேண்டிய இடங்கள்

மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads