காரமடை

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

காரமடைmap
Remove ads

காரமடை (ஆங்கிலம்:Karamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில், இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். காரமடை வழியாக கோவை - உதகமண்டலம் நெடுஞ்சாலை செல்கிறது.

விரைவான உண்மைகள்
Remove ads

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்

15 அக்டோபர் 2021 அன்று காரமடை பேரூராட்சியை, நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[1][2]

அமைவிடம்

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள காரமடை நகராட்சியில் பிரசிதிபெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. காரமடை நகராட்சியானது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓர் மூன்றாம் நிலை நகராட்சியாகும். கோயம்புத்தூரிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே மேட்டுப்பாளையம் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

போக்குவரத்து

காரமடை நகராட்சி கோவை - ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே ஊட்டியில் இருந்து கோவை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகள் காரமடை வழியாக செல்கிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கோவை உக்கடம், காந்திபுரம் பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும் காரமடைக்கு இயக்கப்படுகிறது.

நகராட்சியின் அமைப்பு

19.8 சகி.மீ. பரப்பும், 22 வார்டுகளும், 174 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 9792 வீடுகளும், 35166 மக்கள்தொகையும் கொண்டது.[4]வொக்கலிகா கவுடா சமூகம் நகரத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ளது.[5][6][7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11.27°N 76.97°E / 11.27; 76.97 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353 மீட்டர் (1158 அடி) உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கின்றது.

ஆன்மீக இடங்கள்

காரமடை அரங்கநாதர் கோவில்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads