காராங்தெங்கா கல்வெட்டு
இந்தோனேசியா, மத்திய ஜாவா, காராங்தெங்கா குக்கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
காராங்தெங்கா கல்வெட்டு அல்லது காயூமுங்கான் கல்வெட்டு (ஆங்கிலம்: Karangtengah Inscription; இந்தோனேசியம்: Prasasti Kayumwungan; ஜாவானியம்: Prasasti Kayumwungan) என்பது இந்தோனேசியா, மத்திய ஜாவா, தெமாங்கோங் குறுமாநிலம் (Temanggung Regency), காராங்தெங்கா குக்கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டு ஆகும். இது 746-ஆம் சக ஆண்டு அல்லது கிபி 824-ஆம் ஆண்டைச் சேர்ந்தது.
இந்தக் கல்வெட்டு பண்டைய ஜாவானிய எழுத்து முறையில் பழைய ஜாவானிய மொழி (Old Javanese)மற்றும் சமசுகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது.
Remove ads
பொது
கல்வெட்டின் 1-ஆவது வரி தொடங்கி 24-ஆவது வரிகள் வரை சமசுகிருத மொழியிலும், மீதமுள்ள வரிகள் பழைய ஜாவானிய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டு போரோபுதூர் மற்றும் மத்திய ஜாவா மெண்டுட் கோயில் ஆகிய இரு கோயில்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்
பிரமோதவர்தனி


சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட பகுதிகளில் சமரதுங்கன் (Samaratungga) என்ற மன்னர் குறிப்பிடப்பட்டுள்ளார். அவரின் மகள் பிரமோதவர்தனி (Pramodhawardhani) ஒரு புனித ஜெயின் ஆலயத்தை (Jinalaya) திறந்து வைத்தார். அந்த ஆலயம் போரோபுதூர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சைலேந்திர வம்சத்தின் மன்னர் இந்திரனின் தகன சாம்பலை வைப்பதற்கு வேணுவனா (மூங்கில் காடு) (Venuvana) என்று அழைக்கப்படும் ஒரு புனித ஆலயம் கட்டப் பட்டத்தையும் காராங்தெங்கா கல்வெட்டு குறிப்பிடுகிறது. வேணுவனா ஆலயம் என்பது மத்திய ஜாவா மெண்டுட் கோயில் அல்லது மத்திய ஜாவா நிகாவென் கோயில் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.[1]
சமரதுங்கன்
பழைய ஜாவானிய மொழியில் எழுதப்பட்ட பகுதிகளில் ஒரு நிகழ்வைக் குறிப்பிடப்பட்டுள்ளது; அதாவது 746-ஆம் சக ஆண்டு (கி.பி 824), கயும்வுங்கான் (Kayumwungan) எனும் இடத்தில் இருந்த நெல் வயல்களை வரி இல்லாத நிலமாக ராக்காய் பத்தாப்பான் பூ பலார் (Rakai Patapan pu Palar) திறந்து வைத்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராக்காய் பத்தாப்பான் பூ பலார் என்பவர் மாதரம் இராச்சியத்தின் மன்னரான சமரதுங்கன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன், ராக்காய் கருங் (Rakai Garung) என்பது சமரதுங்காவின் மற்றொரு பெயர் என்று இந்தோனேசிய வரலாற்றாசிரியர் செலாமாட் முல்ஜானா கூறுகிறார்.
Remove ads
மேலும் காண்க
- சங்கல் கல்வெட்டு (732) - (Canggal inscription)
- கலாசான் கல்வெட்டு (778) - (Kalasan inscription)
- கெலுராக் கல்வெட்டு (782) - (Kelurak inscription)
- மந்தயாசி கல்வெட்டு (907) - (Mantyasih inscription)
- லகுனா செப்பேடு (900) - (Laguna Copperplate Inscription)
- சிவக்கிரக கல்வெட்டு (856) - (Shivagrha inscription)
- திரி தெபுசான் கல்வெட்டு (842) - (Tri Tepusan inscription)
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads