காளராத்திரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காளராத்திரி (Kalaratri) (சமசுகிருதம்:कालरात्रि) பார்வதியின் அம்சமான நவ துர்கைகளில் ஒருவர். இத்தாய் தெய்வத்தைப் பற்றி தேவி மகாத்மியம் எனும் நூலில் கூறப்பட்டுள்ளது. இந்நூல் காளராத்திரி தேவியை மிகவும் பயங்கரத் தோற்றம் கொண்டவள் எனக்கூறுகிறது.[1][2]காளியும், காளராத்திரி தேவியும் ஒருவரே என்றும் கருதுவர்.[3]சில நேர்ங்களில் காளி மற்றும் காளராத்திரி தேவி வேறு வேறானர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.[4]
ந்வராத்திரி நோன்பின் 7ஆம் நாளில் துர்கையின் அம்சமான காளராத்திரி தேவியை பக்தர்கள் பூஜிப்பது வழக்கம்.[5]
பார்வதியின் அம்சமான காளாராத்திரி தேவி மங்களம் மற்றும் தைரியத்தின் அடையாளமாக திகழ்பவர். இவரது ஆயுதங்கள் வஜ்ராயுதம் மற்றும் வளைந்த வாள் ஆகும்.இவர் பய முத்திரை மற்றும் வரத முத்திரைகளுடன் காட்சியளிப்பவள். இத்தேவியின் வாகனம் கோவேறு கழுதை அல்லது கழுதை ஆகும்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads