கிடாரிகள்

From Wikipedia, the free encyclopedia

கிடாரிகள்
Remove ads

கிடாரைட்டுகள் (Kidarites) (சீனம்: 寄多羅 Jiduolo[1]) பண்டைய பாக்திரியாவை தலைமையிடமாகக் கொண்டு, நடு ஆசியா மற்றும் தெற்காசியாவின் ஆப்கானித்தான், பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளை கிபி 4ம் நூற்றாண்டு முதல் 5ம் நூற்றாண்டு முடிய ஆண்ட வம்சத்தினர் ஆவார். கிடாரைட்டு மக்களை, முன்னர் இந்தியாவில் ஹூணர்கள் என்றும், கிழக்கு ஐரோப்பாவில் சியோனிட்டுகள் என்றும் அழைக்கப்பட்டனர்.

விரைவான உண்மைகள் கிடாரைட்டுகள், தலைநகரம் ...

சாசானியப் பேரரசு மற்றும் குசானப் பேரரசு காலத்தில், நடு ஆசியாவின், பாக்திரியாவில் கிபி 320ல் ஆட்சியை நிறுவிய[2] கிடாரன் எனும் நாடோடி மன்னரின் பெயரால், இவ்வம்சத்திற்கு கிடாரைட்டு வம்சம் எனப்பெயராயிற்று.

சாசானியப் பேரரசின் கிழக்குப் பகுதியை கைப்பற்றி, கிடாரைட்டு இராச்சியத்தை ஆண்ட கிடாரைட்டு மன்னர்கள் கிபி 320 முதல் கிபி 500 முடிய ஆண்டனர். பின்னர் ஹூணர்களிடம் இராச்சியத்தை இழந்தனர்.

Remove ads

கிடாரைட்டு இராச்சியத்தின் அமைவிடம்

நடு ஆசியாவில் அமைந்த கிடாரைட்டு இராச்சியத்தின் வடக்கில் குவாரசமியா, கிழக்கில் காஷ்மீர், தெற்கில் குசான் பேரரசு, மேற்கில் சாசானியப் பேரரசு எல்லைகளாக கொண்டிருந்த கிடாரைட்டு இராச்சியம், தற்கால துருக்மெனிஸ்தான், தாஜிக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானித்தான், இந்தியா மற்றும் பாக்கித்தான் பகுதிகளைக் கொண்டிருந்தது.[3]

தோற்றம்

Thumb
மீசை மற்றும் தாடியின்றி காணப்படும் கிடாரைட்டுகளின் மன்னர் கிடாரனின் உருவம் பொறித்த நாணயம், ஆட்சிக் காலம்: 350 - 386[4]

கிடாரைட்டு மக்கள் நடு ஆட்சியாவின் அல்த்தாய் மலைத்தொடர்களில் ஆடு, மாடுகளை மேய்க்கும் நாடோடி மக்கள் ஆவார். கிடாரைட்டு மக்களின் உடல் நிறம் , காகேசியர் மற்றும் கிழக்கு ஆசியாவின் மங்கோலியர்களின் உடல் நிறக்கலவையினராகக் காணப்பட்டனர் என மானிடவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.[5]

அக்காலத்திய தெற்காசியாவின் நாகரீகத்தின் எதிராக, உள் ஆசியாவின் நாகரீகத்தின் படி, கிடாரைட்டு மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் பொறிக்கப்பட்ட கிடாரைட்டு மன்னர்களின் உருவங்கள் மீசை, தாடியின்றி காணப்பட்டது.[6]மேலும் நாணயத்தின் பின்புறத்தில் வில்லேந்திய வீரர்களின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.[7]மேலும் கிடாரைட்டு குழந்தைகளின் தலையை செயற்கை முறையில் தேவையான வடிவில் அமைக்கும் பழக்கும் [8]கிடாரைட்டுகளிடமிருந்தது.[9]

சில கிடாரைட்டுகள் மக்கள் சிவப்பு ஹூணர்கள் தோற்றத்திலும் காட்சியளித்தனர்.[10][11]

Remove ads

கிடாரைட்டு இராச்சியம்

ஆதாரங்கள்

தற்கால ஆப்கானித்தான் மாநிலமான பால்க் மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட, கிபி 380 காலத்திய பாக்திரிய மொழியில் வெளியிட்டப்பட்ட நாணயங்களில் கிடாரைட்டு மன்னர்களை குறித்துள்ளது.

முதன் முதலில் பண்டைய இந்தியாவை தொடர்ந்து முற்றுகையிட்ட கிடாரைட்டுகளை ஹூணர்கள் என அழைக்கப்பட்டனர்.

இந்தியாவின் வரலாற்று ஆவணங்களின் படி, கிடாரைட்டு எனப்படும் ஹூணர்கள் தற்கால ஆப்கானித்தான் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வாவில், கிபி 5-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் குடியேறியவர்கள். குப்தப் பேரரசின் வடமேற்கு பகுதியை கிபி 455ல் கிடாரைட்டுகள் முற்றுகையிட்ட போது, குப்தப் பேரரசர் ஸ்கந்தகுப்தர், கிடாரைட்டுகளை விரட்டி அடித்தார்.

பாக்திரியாவில் குடியேற்றம்

Thumb
மன்னர் கிடாரனின் உருவம் பொறித்த நாணயம்
Thumb
சாசானியப் பேரரசர் மூன்றாம் ஷாப்பூர் உருவம் பொறித்த நாணயம், ஆட்சிக் காலம் கிபி 309 - 3794

பேரரசர் இரண்டாம் ஷாப்ப்பூர் (ஆட்சிக் காலம்:309 - 379), கிபி 350ல் சாசானியப் பேரரசின் வடகிழக்கு எல்லைகளில் முற்றுகையிட்ட நடு ஆசியாவின் சிதியர்கள் போன்ற நாடோடிக் கூட்டத்தினர் முற்றுகையிட்டனர்.[12]அக்கால கட்டத்தில், ஆடு, மாடுகள் மேய்க்கும் நாடோடி குரும்ப இனத்தினரான சியோனிட்டுகள் எனப்படும் கிடாரைட்டுகள் மற்றும் ஹூணர்கள், சாசானியப் பேரரசின் கிழக்குப் பகுதிகளையும், குப்தப் பேரரசின் வடமேற்கு பகுதிகளையும் ஆக்கிரமித்தனர்.[1]

கிடாரைட்டுகள் சமர்கந்து நகரத்தை கைப்பற்றி தங்கள் தலைமையிடமாகக் கொண்டடு, சோக்தியானா மக்களுடன் நல்லுறவு காத்தனர். [2] சமர்கந்தில் தங்கள் நகர இராச்சியத்தை அமைத்த கிடாரைட்டுகள், முந்தைய நாடோடி வாழ்க்கையை கைவிட்டு, பாரசீகப் பண்பாடு மற்றும் நாகரீகத்தை கைப்பிடித்தனர். .[2]

வடமேற்கு இந்தியாவில் விரிவாக்கம்

Thumb
மன்னர் கிடாரன் உருவ நாணயம் (கிபி 350-385)
Thumb
கிடாரைட்டு மன்னர் உருவம் பொறித்த நாணயத்தின் பின்பக்கத்தில் சிவன் மற்றும் நந்தி உருவம்
Thumb
கிடார மன்னர் வினயாதித்தன் வெளியிட்ட நாணயம், கிபி 5-ஆம் நூற்றாண்டு, ஜம்மு காஷ்மீர்

கிடாரைட்டுகள் பெஷாவரைக் கைப்பற்றிய பின்னர் 420ல் வடக்கு ஆப்கானிஸ்தானினைக் கைப்பற்றினர். கிபி 440ல் சோக்தியானாவை வென்று, நடு ஆசியாவின் பெரும்பகுதிகளை கைப்பற்றினர். பின்னர் காந்தாரம், பெஷாவர், காஷ்மீர் பகுதிகளைக் கைப்பற்றினர். கிபி 450ல் ஹெப்தலைட்டுகளின் எழுச்சியின் போது, கிடாரைட்டுகள் தங்களின் நாடோடி வாழ்க்கை முற்றும் கைவிட்டனர். சாசானியப் பேரரசர் முதலாம் பெரோஸ் ஆட்சியின் போது, கிபி 467ல் கிடாரைட்டுகளை போரில் வென்றார். கிடாரைட்டுகளின் இத்தோல்வியால் ஹூணர்கள் எழுச்சியுற்றனர். மேலும் கிடாரைட்டுகள் வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

Remove ads

முக்கிய கிடாரைட்டு ஆட்சியாளர்கள்

முதலாம் கிடாரன்கிபி 320
குங்கன்330 -  ?
வராக்ரன் குசான்ஷா 330 முதல் 365330 முதல் 358
குரும்பேட்358 - 380
இரண்டாம் கிடாரன்360
பிராம்மி புத்தாலன்370
(அறியப்படவில்லை)388/400
வர்கரன் II425
கோபோசிகா450
சலனவீரன்400களின் நடுவில்
வினயாதித்தியன்400-களுக்கு பின்னர்
கண்டிகன்500-களுக்கு முன்னர்

இதனையும் காண்க

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

ஆதார நூல்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads