கிமு 1
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டு கி.மு. 1 (1 BC) என்பது யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் அல்லது சனிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இவ்வாண்டு அக்காலத்தில் இலெந்தூலசு, பீசோ தூதர்களின் ஆண்டு (Year of the Consulship of Lentulus and Piso) அல்லது பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் ஆண்டு 753 எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கி.மு. 1 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இதற்கு அடுத்த ஆண்டு கிபி 1 ஆகும், யூலியன் நாட்காட்டியில் "ஆண்டு 0" வழக்கில் இருக்கவில்லை.
Remove ads
நிகழ்வுகள்
சீனா
உரோமைப் பேரரசு
- முடிக்குரிய இளவரசர் கையசு சீசர் தனது கௌரவத்தைப் பெறும் முயற்சியாக லிவில்லாவைத் திருமணம் செய்தார்.[3]
- கார்ட்டாசெனாவில் உரோமை நாடக அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது.[4]
- அவுலசு செசீனா செவரசு தூதராக பேரரசர் அகசுத்தசினால் நியமிக்கப்பட்டார்.[5]
இந்தியா
சமயம்
- கிறித்தவத்தில் இயேசுவின் மதிப்பிடப்பட்ட பிறப்பு, அவரது அனோ டொமினி காலத்தில் தியோனீசியஸ் எக்சிக்கசு என்பவரால் கொடுக்கப்பட்டது; பெரும்பாலான அறிஞர்களின் கூற்றுப்படி, தியோனீசியசு "அவதாரம்" என்ற சொல்லைப் பயன்படுத்தினார், ஆனால் அவர் இயேசுவின் கருத்தரிப்பையா அல்லது பிறப்பையா குறித்தார் என்பது அறியப்படவில்லை. இருப்பினும், குறைந்தபட்சம் ஒரு அறிஞராவது தியோனீசியசு இயேசுவின் அவதாரத்தை அடுத்த ஆண்டு கிபி 1 இல் வைத்தார் என்று கூறுகிறார்.[7][8] பெரும்பாலான இன்றைய அறிஞர்கள் தியோனிசியசின் கணக்கீடுகளை அதிகாரபூர்வமானதாகக் கருதவில்லை, அத்துடன் கிறித்துவின் பிறப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.[9]
Remove ads
இறப்புகள்
- ஆகத்து 15 – ஆய், ஆன் அரசமரபு சீனப் பேரரசர் (பி. கிமு 27)[10][11]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads