கிமு 1-ஆம் ஆயிரமாண்டு

ஆயிரமாண்டு From Wikipedia, the free encyclopedia

கிமு 1-ஆம் ஆயிரமாண்டு
Remove ads

கி.மு. 1-ஆம் ஆயிரமாண்டு (1st millennium BC) கி.மு. 1000-ஆம் ஆண்டு முதல் கி.மு. 1-ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியாகும். இரும்புக்காலம் எனப்படும் இக்காலகட்டத்தில் பல பேரரசுகள் கட்டியெழுப்பப்பட்டன. உலக மக்கள் தொகை இக்காலப்பகுதியில் அதிகரித்து 170 இலிருந்து 400 மில்லியன் வரை எட்டியது.

விரைவான உண்மைகள் ஆயிரமாண்டு:, நூற்றாண்டு: ...
Thumb
மனித முகத்துடன் காளை மாடு. அசிரியா, அண். கி.மு. 713–716

இந்த ஆயிரமாண்டின் இறுதியில் உரோமைப் பேரரசு எழுச்சி கண்டது. தெற்காசியாவில் வேதப் பண்பாடு மௌரியப் பேரரசில் வேரூன்றியது. ஆரம்பகால கெல்ட்டியர் நடு ஐரோப்பாவைக் கட்டுப்படுத்தினர். வடக்கு ஐரோப்பா ரோமருக்கு முன்னரான இரும்புக்காலத்தில் இருந்தது. நடு ஆசியா ஸ்கைத்தியர்களின் (ஈரானிய பழங்குடிகள்) கட்டுப்பாடில் இருந்தது. சீனாவில் கன்பூசியம் தலைதூக்கியது. 1-ஆம் ஆயிரத்தின் இறுதியில் ஆன் அரசமரபு நடு ஆசியாவில் பரவியது. நடு அமஎரிக்காவில் மாயா நாகரிகம் எழுச்சி கண்டது. ஆப்பிரிக்காவில் பண்டைய எகிப்து வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. யூதம், சரத்துஸ்திர சமயம், இந்து சமயம், வேதாந்தம்), ஜைனம், பௌத்தம் வளர்ச்சியடைந்தது.

Remove ads

முக்கிய நிகழ்வுகள்

Remove ads

கண்டுபிடிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads