கிம்புருசர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிம்புருசர்கள், பண்டைய பரத கண்டத்தின் இமயமலைப் பகுதிகளில் வாழ்ந்த உயர் சக்தி கொண்ட இனக் குழுவினர்கள் ஆவார். கிம்புருசர்கள், பாதி விலங்கு வடிவமும்; பாதி மனித வடிவம் கொண்டவர்கள் என மகாபாரதம் கூறுகிறது.[1]
கிம்புருசர்கள், சிங்க முகமும் மனித உடலும் கொண்டவர்கள். கிம்புருடர்கள் கிண்ணரர்களுடன் தொடர்புடைய இனக்குழுவினர் ஆவர். சிங்கத்தின் குண இயல்புகளை கொண்ட மலை நாட்டு கிராத இனக் குழுவினருடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சில புராணங்களில் கிம்புருடர்களை, காம்போஜ நாட்டு சத்திரியக் குதிரைப் படைவீரர்கள் போன்றவர்கள் எனக் கூறுகிறது.
Remove ads
இராமாயணம் & புராணக் குறிப்புகள்
இராமாயணக் காவியம், வானரர்கள் மற்றும் கிம்புருசர்களின் உதவியுடன், சீதை இருக்கும் இடம் கண்டறிந்து, போரில் இராவணனை இராமன் வீழ்த்தினார் எனக் கூறுகிறது. பாகவத புராணத்தின் உத்தவ கீதையில் பகவான் கிருட்டிணன் தான் கிம்புருசர்களில் அனுமானாக உள்ளேன் எனப் பெருமையாக கூறுகிறார்.
மகாபாரதக் குறிப்புகள்
கிம்புருசர்கள், பாதி சிங்க வடிவமும்; பாதி மனித வடிவமும் கொண்டவர்கள் என மகாபாரதம் கூறுகிறது.[1]
அருச்சுனன் படையெடுப்புகள்
தருமனின் இராசசூய வேள்விக்கான நிதி திரட்ட பரத கண்டத்தின் வடக்குப் பகுதியான இமயமலை நாடுகள் மீது படையெடுத்து வென்ற நாடுகளில் கிம்புருசர்கள் ஆண்ட கிம்புருச நாடும் குறிப்பிடப்படுகிறது.[2]
கணங்கள்
இந்து தொன்மவியலில் கூறப்படும் பதினெட்டு கணங்களில் கிம்புர்சர்களும் ஒருவராக உள்ளனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads