கியூபெக் பாலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கியூபெக் பாலம் (பிரெஞ்சு: Pont de Québec, ஆங்கிலம்: Quebec Bridge) கனடாவில் கியூபெக் மாநிலத்தில் சென் லோரன்ஸ் ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது கியூபெக் நகரின் மேற்கேயும் லேவி நகரிற்கும் இடையில் அமைந்துள்ளது.
இதன் மொத்த நீளம் 987 மீட்டர்களும் அகலம் 29 மீ, உயரம் 104 மீ ஆகும்.
Remove ads
வரலாறு
1904ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பாலத்தின் கட்டுமனப் பணிகள் 1907 நடுப்பகுதியில் ஏறத்தாழ முடிவடையும் நிலையை எட்டியது. எனினும் ஆகஸ்ட் 29, 1907 மாலையில் இதன் தெற்குப் பகுதியும் மத்தியின் ஒரு பகுதியும் சென் லோரன்ஸ் ஆற்றில் இடிந்து வீழ்ந்தது. இவ்விபத்தில் 86 தொழிலாளர்களில் 75 பேர் உயிரிழந்தனர். ஏனையோர் படுகாயமடைந்தனர்.
இதன் பின்னர் இரண்டாம் பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பித்தன. செப்டம்பர் 11, 1916 இல் இடம்பெற்ற இன்னுமொரு விபாத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
முடிவில் ஆகஸ்ட் 1919 இல் மொத்தம் $25 மில்லியன் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. டிசம்பர் 3 1919 இல் தொடருந்து சேவைக்காக இப்பாலம் திறக்கப்பட்டது.
Remove ads
வெளி இணைப்புகள்
- காலக்கோடு (பிரெஞ்சு மொழியில்)
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads