கிருஷ்ணனாட்டம்

From Wikipedia, the free encyclopedia

கிருஷ்ணனாட்டம்
Remove ads

கிருஷ்ணாட்டம் ( மலையாளம் : சல்லாத், IAST : Kṛṣṇaāṭṭaṃ) என்று அழைக்கப்படும் கிருஷ்ணாட்டம் என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ளகுருவாயூரப்பன் கோவிலில் ஆடப்படும் ஒரு நாட்டுப்புற நடனக்கலை ஆகும். இது ஒரு நாட்டிய நாடகமாகும். கிருஷ்ணனின் கதையை எட்டு நாடகங்களின் வரிசையில் முன்வைக்கிறது. இது வடக்கு கேரளாவில் கோழிக்கோடு சாமூத்திரி ராஜாவான மனவேதா (கி.பி 1585–1658) என்பவரால் உருவாக்கப்பட்ட நாடக உரை வடிவத்தை அடிபடையாகக் கொண்டது. [1] இதன் எட்டு நாடகங்களும் கிருஷ்ணனின் எட்டு அவதாரங்களான, காளியமர்தனம், ராசக்கிரீடை, கம்சவதம், சுயம்வரம், பானாயுதம், விவிதவதம் மற்றும் சுவர்க்காரோகனம். ஆகியவற்றை வெளிப்படுத்துவன.[2] இந்தக் கலையானது கேரளாவின் திருச்ச்சூர் மாவட்டம், குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலில் வழக்கமாக நிகழ்த்தப்படுவதால் அழியாமல் காக்கப்பட்டு இன்றும் நிகழ்த்தப்படுகிறது.

Thumb
கிருஷ்ணனாட்டம்
Remove ads

வரலாறு

1958 ஆம் ஆண்டில் கோடிக்கோடு நாட்டின் நடனக் கலைஞர்கள் குழு குருவாயூர் கோவிலைப் பராமரிக்க வேண்டி அக்கோயிலுக்கு வந்தனர்.[3] அதுமுதல் கலைஞர்கள் மட்டுமே கொண்ட குழுவால் இன்றுவரை அக்கோயில் நன்கு பராமரிக்கப்படுகிறது. கிருஷ்ணனாட்டம் கோழிக்கோட்டின் ஜாமோரின் மனவேதாஎன்பவர் கி.பி. 1654 ஆம் ஆண்டு எழுதிய கிருஷ்ணாகீதி என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. [4] மனவேதா கிருஷ்ணர் நேரில் வந்து மயிலிறகுத் தருவது போன்ற காட்சியைக் கண்டார். எனவே இந்த நாட்டிய நாடகத்தின் முக்கிய அடையாளமாக மயிலிறகு திகழ்கிறது. . கிருஷ்ணனாட்டம் நிகழ்த்தும் கலைஞர்கள் ஒரு மயிலிறகினை நிகழ்வின்பொழுது அணிந்துகொள்வர். இது மனவேதாவிற்கு கிருஷ்ணர் அருள்புரிந்த காட்சியை நினைகூர்வதாக அமைகிறது.[5]

Remove ads

மயிலிறகும் அவதாரங்களும்

Thumb
கிருஷ்ணனாட்ட முத்திரை.

மனவேத மன்னர் கிருஷ்ணரை நேரில் காண வேண்டும் என்ற தீராத ஆவல் கொண்டிருந்தார். இந்த தனது லட்சியம் குறித்து வில்வமங்கலம் என்ற கிருஷ்ணன் கோயில் பூசாரியிடம் கூறினார். அடுத்த நாள் பூசாரி குருவாயூரப்பன்மனவேதாவைக் காண ஒப்புதல் கொடுத்திருப்பதாகவும், அதிகாலை நேரத்தில் எலஞ்சி மரத்தடியில் விளையாடும் கிருஷ்ணரை அவர் பார்க்கலாம் எனவும் கூறினார்.[6] ஆயினும் மனவேதா மன்னர் கிருஷ்ணரைப் பார்க்க மட்டுமே முடியும்; அவரைத் தொடக்கூடாது என்ற நிபந்தனையை விதித்திருப்பதாகவும் கூறினார். இந்த ஒப்பந்தத்தின்படி, மனவேதா குருவாயுரப்பனை எலஞ்சி மரத்தடியில் விளையாடும் ஸ்ரீ கிருஷ்ணரை சிறு குழந்தை வடிவத்தில் பார்த்தபோது, மன்னர் மிகவும் உணர்வுவயப்பட்டு இருந்தார், அவர் புளங்காகிதம் அடைந்து தன்னை மறந்து, சிறிய ஸ்ரீ கிருஷ்ணரை அள்ளியெடுத்து அரவணைக்க விரைந்தார். "இது நடக்கும் என்று வில்வமங்கலம் என்னிடம் சொல்லவில்லை" என்று கூறி குருவாயூரப்பன் உடனடியாக அங்கிருந்து மறைந்தார். இருப்பினும், பகவான் கிருஷ்ணரின் தலையில் அணிந்திருக்கும் மயிற்பீலிக் கொத்தில் இருந்து மனவேத மன்னருக்கு ஒரு மயில் இறகு கிடைத்தது.[1] அதன் பின்னர் மனவேதாவின் எழுதி வந்த, சொந்த உரையில் எழுதப்பட்ட எட்டு அத்தியாயங்களுள்ள கிருஷ்ணாகீதியை அடிப்படையாகக் கொண்ட கிருஷ்ணனாட்டம் என்ற நாட்டியநாடகத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் கதாபாத்திரத்திற்கான அலங்காரங்களில் தலைமுடியில் மயிலிறகு இணைக்கப்பட்டது. இந்த கிருஷ்ணாட்டம் குருவாயூர் கோயிலின் கருவறைக்கு அருகில் நிகழ்த்தப்படுகிறது. பத்து பத்து நாட்களாக அடுத்தடுத்து தொடர்ந்து இந்த நாட்டியநாடகம் நிகழ்த்தப்படுகிறது. ஒன்பதாம் நாளில், பகவான் கிருஷ்ணரின் மறைவுடன் தொடரை முடிப்பது நல்லதல்ல என்று ஜாமோரின் உணர்ந்ததால் அவதாரம் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது. [7] ஆசீர்வதிக்கப்பட்ட கலை வடிவம் இன்றும் குருவாயூர் கோவிலால் பராமரிக்கப்பட்டு பக்தர்களின் நன்கொடையால் நடத்தப்படுகிறது. [8]

Remove ads

நூலாசிரியர்

சமூத்திரி மனவேத மன்னர் (கி.பி 1585–1658) ஆனையத் கிருஷ்ணா பிஷாரடி மற்றும் தேசமங்கலத்து வாரியார் ஆகியோரிடமிருந்து கல்வி பெற்றார். அவர் 1643 இல் பூர்வ பாரத சம்பு (சமஸ்கிருதம்)என்ற நூலை எழுதினார். [9] 1653 நவம்பர் 16 அன்று கிருஷ்ணனாட்டம் என்ற நாட்டிய நாடகத்தை தனது சொந்த உரையில் எழுதி முடித்தார். [10] அவரது சிலை குருவாயூரில் உள்ள 'பாஞ்சாஜன்யம்' என்ற விருந்தினர் மாளிகை அருகே நிறுவப்பட்டது.


மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads