கிருஷ்ணா புஷ்கரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருஷ்ணா புஷ்கரம் கிருஷ்ணா ஆற்றில் 12 வருடங்களுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
Remove ads
12 நாள் விழா
இந்த புஷ்கரம் 12 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குரு கன்னி ராசியில் கடக்கின்ற சமயத்தில் இவ்விழா நடைபெறுகிறது. இவ்வகையில் ஓராண்டிற்கு சிறப்பு இருக்கின்ற போதிலும் முதல் 12 நாள்கள் புனிதமான நாள்களாக இந்தியர்களால் கருதப்படுகிறது. [1] ஆந்திரப்பிரதேசம், கர்னாடகம், தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் புஷ்கரம் என்பதானது கொண்டாடப்பட்டு வருகிறது. 2016இல் இவ்விழா ஆகஸ்டு 12இல் தெர்டங்கி ஆகஸ்டு 23இல் நிறைவு பெற்றது.
Remove ads
படித்துறைகள்
ஆந்திரா மற்றும் கர்னாடகாவில் கீழ்க்கண்ட படித்துறைகளில் இவ்விழா கொண்டாடப் படுகிறது.
ஆந்திரா
விஜயவாடா : பத்மாவதி படித்துறை, கிருஷ்ணவேணி படித்துறை, துர்க்கா படித்துறை, சீதாநகரம் படித்துறை, புன்னாமி படித்துறை, பவானி படித்துறை, பவித்ர சங்கம் படித்துறை
அமராவதி : சிவாலயம் படித்துறை, தியான புத்தர் படித்துறை, தரணிகோட்டா படித்துறை
கர்னூல் மாவட்டம்: படாலா கங்கா படித்துறை (ஸ்ரீசைலம்), சங்கமேஸ்வரம் படித்துறை
கட்வால், மகாபூப் நகர் ஜுரல்லா, பீச்சுப்பள்ளியில் உள்ள படித்துறைகள்
கர்னாடகா
கர்னாடகா : சிகோடி (பாகல்கோட்), ராய்ச்சூர் (கிருஷ்ணா வட்டம்)
Remove ads
பிற புஷ்கரங்கள்
இந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம், நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கோதாவரி புஷ்கரம், காவிரி புஷ்கரம் , பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads