கிழக்கிலங்கைத் தமிழர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் கிழக்கிலங்கைத் தமிழர்கள் எனப்படுவர். கிழக்கிலங்கைத் தமிழர் வரலாறு, அரசியல், சமூக அமைப்பு, பண்பாடு ஆகிய நோக்குகளில் தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் பொருளாதார கல்விச் சூழலும் நிலைகளும் கூட வேறுபட்டவை எனலாம்.
கிழக்கிலங்கை தமிழர் என்ற அடையாளப்படுத்தலை யாழ்ப்பாணத் தமிழர், வன்னித் தமிழர், தீவகத் தமிழர் என்ற கருத்துருக்களுடன் ஒப்பிட்டு வரையறை செய்யலாம். இவ்வேறுபாடுகள் அல்லது தனித்துவ பண்புகள் இருப்பினும் இலங்கைத் தமிழர்களுக்கிடையான ஒற்றுமை அம்சங்களும் இயல்புகளுமே மிகுதியாகும் என்ற கூற்றை இங்கு குறிப்பது முக்கியமாகும்.
Remove ads
வரலாறு
கிழக்கிலங்கைத் தமிழர் நடுவில் காணப்படும் தாய்வழி சமூக அமைப்பை வைத்து நோக்குகையில் கிழக்கிலங்கையில் குடியமர்ந்தோர் சேர நாட்டில் இருந்து வந்தவர்கள் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றார்கள்.[1]
கிழக்கிலங்கை யாழ்ப்பாண இராசதானிக்கு உள் வரமால் கண்டி இராசதானியின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது.
ஒல்லாந்தர் ஆட்சிக்கு வந்தபின் மட்டக்களப்பு வழக்கங்களை முன்வைத்து முக்குவர் சட்டம் இயற்றப்பட்டது.
சமூக அமைப்பு
"ஈழத்திலும் தாய் வழிச் சமுதாய மரபு கிழக்கிலங்கையில் நிலைத்து வருவதாயிற்று. இடைக்காலத்தில் சிங்கள மக்களுடன் இணைந்து சமத்துவமாகச் சகோதர மனப்பான்மையுடன் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இதனால் பல்வேறு வழிகளிலும் இரு இனத்தவர்களிடேயும் பண்பாட்டுக் கலப்பு ஏற்படுவதாயிற்று. இதே போன்று யாழ்ப்பாணப் பிரதேச மக்களும் காலத்துக்குக் காலம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் வந்து குடியேறி வாழலாயினர்." [2]
கிழக்கிலங்கை ஆளுமைகள்
ஈழநாட்டின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்பட்ட மட்டக்களப்பில் பல பெரியார்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தோன்றியுள்ளனர்.
சமயம்
புலவர்கள்
எழுத்தாளர்கள்
அரசியல்
திரைப்படத்துறை
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads