கிழக்கு வர்த்தமான் மாவட்டம்

மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கிழக்கு வர்த்தமான் மாவட்டம்
Remove ads

கிழக்கு வர்த்தமான் மாவட்டம் அல்லது பூர்வ பர்த்தமான் மாவட்டம் (Purba Bardhaman district) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் பழைய வர்தமான் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளைக் கொண்டு 7 ஏப்ரல் 2017 அன்று புதிதாக நிறுவப்பட்ட மாவட்டம் ஆகும். வர்தமான் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளைக் கொண்டு மேற்கு வர்த்தமான் மாவட்டம் நிறுவப்பட்டது.[1] [2] கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் வர்த்தமான் நகராட்சியாகும்.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Thumb
மேற்கு வங்காளத்தின் தென்கிழக்கில் அமைந்த கிழக்கு வர்த்தமான் மாவட்டம் (பூர்வ பர்த்தமான் மாவட்டம்) எண் 9
Remove ads

புவியியல்

வண்டல் மண் நிறைந்த கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தின் தெற்கிலும், தென்கிழக்கிலும் தாமோதர் நதி பாய்கிறது. மாவட்டத்தின் கிழக்கு எல்லைப்பகுதியில் ஹூக்ளி ஆறு பாய்கிறது. இதன் மேற்கில் மேற்கு வர்த்தமான் மாவட்டம் எல்லையாக உள்ளது.[3][4]

பொருளாதாரம்

வேளாண்மை

கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் தொழிலை முழுவதும் சார்ந்துள்ளது. உணவு தாணிய உற்பத்தியில், குறிப்பாக நெல் முப்போக உற்பத்தி கொண்டது. மேலும் பயரு வகைகள், பணப்பயிர்களான ஆமணக்கு, சணல், உருளைக் கிழங்கு உற்பத்தியாகிறது.[5]

போக்குவரத்து

தொடருந்துகள்

தில்லி - ஹவுரா, ஹவுரா - கயா - தில்லி, ஹவுரா - அலகாபாத் - மும்பை செல்லும் தொடருந்துகள் இம்மாவட்டத்தின் வழியாக செல்கிறது.[6][7]

தேசிய நெடுஞ்சாலைகள்

கொல்கத்தா - தில்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 19 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.[8]

மல்லர்பூர் - வர்த்தமான் நகரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 114 மற்றும் மாநில நெடுஞ்சாலை எண்கள் 6, 7, 13, 14 மற்றும் 15 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது. [9]

நிர்வாகக் கோட்டங்கள்

கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தை நிர்வாக வசதிக்கான வர்ததமான் வடக்கு, வர்த்தமான் தெற்கு, கட்வா, கல்னா என நான்கு உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள்து:[1][1][10][10][11]

மேலதிகத் தகவல்கள் உட்கோட்டம், தலைமையிடம் ...

மக்கள் தொகையியல்

2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 4,835,532 ஆகும். அதில் ஆண்கள் 2,469,310 (51%) ஆகவும், பெண்கள் 2,366,222 (49%) ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 509,855 ஆக உள்ளனர்.[12] எழுத்தறிவு கொண்டவர்கள் 3,232,452 ஆக உள்ளனர்.[12]

மேலதிகத் தகவல்கள் கிழக்கு வர்த்தமான் மாவட்ட சமயத்தினர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads