வர்தமான் மாவட்டம்
மேற்கு வங்காளத்தில் இருந்த முன்னாள் மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வர்தமான் மாவட்டம் (Bardhaman district or Burdwan or Barddhaman)) (Pron: bɔrd̪ʰomaːn), இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் இருபது மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் வர்தமான் கோட்டத்தில் அமைந்த ஏழு இம்மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாக தலைமையிடம் வர்த்தமான் நகரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பிற முக்கிய நகரங்கள் ஆசான்சோல் மற்றும் துர்க்காபூர் ஆகும். ஆசான்சோல் நகரம் மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா நகரத்திற்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரமாகும்.
Remove ads
வர்த்தமான் மாவட்டப் பிரிவினை
7 ஏப்ரல் 2017ல் வர்தமான் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளைக் கொண்டு கிழக்கு வர்த்தமான் மாவட்டம் என்றும், மேற்குப் பகுதிகளைக் கொண்டு மேற்கு வர்த்தமான் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
பெயர்க்காரணம்
சமண சமயத்தின் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களில் இறுதியானவரான வர்தமான மகாவீரரின் நினைவைப் போற்றும் வகையில் இம்மாவட்டத்திற்கும், மாவட்ட தலைமையிடத்திற்கும் வர்தமான் என்று அழைக்கப்படுகிறது.
புவியியல்
7,024 சதுர கிலோ மீட்டர் பரப்பும், அறுபத்து ஒன்பது இலட்சம் மக்கள் தொகை கொண்ட வர்தமான் மாவட்டம், வடக்கில் பிர்பூம் மாவட்டம் மற்றும் முர்சிதாபாத் மாவட்டம், கிழக்கில் நதியா மாவட்டம், தென்கிழக்கில் ஹூக்லி மாவட்டம், தென்மேற்கில் பாங்குரா மாவட்டம் மற்றும் புருலியா மாவட்டம், வடமேற்கில் தன்பாத் மாவட்டம் (ஜார்கண்ட் மாநிலம்) எல்லைகளாகக் கொண்டது.[2]
ஆறுகள்
இம்மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் தாமோதர் ஆறு மற்றும் ஹூக்ளி ஆறுகள் ஆகும்.
கனிம வளங்கள்
இம்மாவட்டத்தில் நிலக்கரி, இரும்பு, மங்கனீசு மற்றும் அலுமினிய கனிம சுரங்கள் அதிகம் உள்ளது. இங்குள்ள இராணிகஞ்ச் நிலக்கரி சுரங்கம் இந்தியாவின் முதல் நிலக்கரி சுரங்கமாகும்.
நீர் ஆதாரங்கள்
இம்மாவட்டம் தாமோதர் ஆற்றுச் சமவெளியில் அமைந்துள்ளதால் இங்கு 17,000 நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ளன.
நிர்வாக அமைப்பு
7,024 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஆசான்சோல், துர்காபூர், கல்னா, கட்வா, வர்தமான் சதர் வடக்கு, வர்தமான் சதர் தெற்கு என ஆறு உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[3] வர்தமான் மாவட்டத்தில் 32 காவல் நிலையங்கள், 31 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், இரண்டு மாநகராட்சிகள், ஒன்பது நகராட்சி மன்றங்கள், 277 ஊராட்சி மன்றங்கள் மற்றும் 2438 கிராமங்கள் உள்ளது.[3][4]
அரசியல்
வர்தமான் மாவட்டம், குல்தி, பரபானி, ஹிராப்பூர், ஆசான்சோல் வடக்கு, ராணிகஞ்ச், ஜமுரியா, உக்ரா, துர்காபூர் மேற்கு, துர்காபூர் கிழக்கு, கங்க்சா, ஆஸ்கிராம், பாட்டர், கல்சி, வர்தமான் வடக்கு, வர்தமான் தெற்கு, காந்தகோஷ், ராய்னா, ஜமால்பூர், மிமரி, கல்னா, நதங்காட், மாண்டேஸ்வர், பூர்வஸ்தாலி, கட்வா, மங்கள்கோட் மற்றும் கேதுகிராம் என 26 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது.[5]
மேலும் இம்மாவட்டம் ஆசான்சோல், வர்தமான் - துர்காபூர் மக்களவைத் தொகுதி, வர்தமான் கிழக்கு மக்களவை தொகுதி, என மூன்று மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 7,717,563 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 3,966,889 மற்றும் பெண்கள் 3,750,674 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 945 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,099 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 76.21 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 82.42 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 69.63 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 832,033 எண்ணிக்கை ஆக உள்ளது.[6] இந்தியாவின் 640 மாவட்டங்களில் மக்கள்தொகை மிக்க மாவட்டங்களில் வர்தமான் மாவட்டம் ஏழாவதாக உள்ளது.[7]
சமயம்
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 6,008,472 ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 1,599,764 ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 21,220 ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள்தொகை 16,675 ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்களின் மக்கள்தொகை 23,188 ஆகவும், பிற சமயத்தவர்களின் மக்கள்தொகை கனிசமாகவும் உள்ளது.
போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலை 2, பெரும் தலைநெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 60 இம்மாவட்டத்தை கடந்து செல்கிறது.
ஆசான்சோல்[8] மற்றும் துர்காபூர் தொடருந்து நிலையங்கள் மாநிலத்தின் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.
படக்காட்சிகள்
- 108 சிவன் கோயில்
- வங்காள பாரதி பவன்
- வர்தமான் அரண்மனை
- வர்தமான் பல்கலைக்கழகம் நுழைவாயில்
- வர்தமான் பல்கலைக்கழகத்தின் தெற்கு நுழைவாயில்
- பர்ன்பூர் நேரு பூங்கா
- துர்க்காபூர் நகரம்
- கோலாபாக்
- வர்தமான் மேகநாத் சகா கோளரங்கம்
- தாமோதர் ஆறு
- துர்காபூர் இரும்பாலை
- சர்ப்ப மங்கள கோயில்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads