கிஷ்மு

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிஷ்மு (Kishmu, 1947 - 10 நவம்பர் 1993) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் மேடை நடிகர் ஆவார். கிஷ்மு 1982 இல் விசு இயக்கிய மணல் கயிறு என்ற படத்தில் அறிமுகமானார். மணல் கயிறு, டௌரி கல்யாணம், சிதம்பர ரகசியம், சம்சாரம் அது மின்சாரம் , திருமதி ஒரு வெகுமதி, காவலன் அவன் கோவலன், வரவு நல்ல உறவு ஆகிய திரைப்பங்களில் நடத்ததிற்காக குறிப்பிடப்படுகிறார்.

விரைவான உண்மைகள் கிஷ்மு, பிறப்பு ...
Remove ads

திரைப்பட வாழ்க்கை

நாடகத்துறையில் இருந்த கிஷ்மு தனது சகோதரர் விசுவுடன் நடிக்கத் தொடங்கினார். விசு இயக்கிய இரண்டாவது படமான மணல் கயிறு (1982) படத்தில் கிஷ்மு திரைப்பட நடிகராக அறிமுகமானார். இது விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியானவும் பாராட்டைப் பெற்றது. 1985 ஆம் ஆண்டில், கிஷ்மு அவள் சுமங்கலிதான் படத்தில் நடித்தார், 1986 ஆம் ஆண்டில் சம்சாரம் அது மின்சாரம் மற்றும் ஊமை விழிகள் ஆகியவற்றில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார். இவை இரண்டும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. இவரது ஆரம்ப கால நடிப்புப் தொழிலில், கிஷ்மு தனது சகோதரரின் படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் இறுதியில் மற்றவர்களின் படங்களிலும் நடித்தார். 1982 முதல் 1990 வரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.[1][2]

Remove ads

திரைப்படவியல்

இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
உதவி இயக்குநராக
Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads