கீகட நாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீகட நாடு (Kikata) பிந்தைய வேத காலத்தில் இருந்த நாடாகும். மகத நாட்டின் முன்னோடிகளே கீகட நாட்டினர் என நம்பப்படுகிறது. ரிக் வேதத்தின் 3.53.14-ஆம் பகுதியில் கீகட நாட்டு அறிவு ஜீவிகளில் பலர் மகத நாட்டில் இருந்தனர் எனக் குறிப்பிடுகிறது.[1]

சிம்மர் எனும் வரலாற்று அறிஞர் கீகடர்களை ஆரியர் அல்லாத இனக்குழுவினர் என்றும், கீகடர்களை யட்சர்கள் (Yaksa) என்றும் வாதிக்கிறார். வேப்பரின் கூற்றுப்படி, கீகடர்கள் வேத கால மக்கள் என்றும்; பிற வேத கால மக்களுடன் அடிக்கடி பிணக்கு கொண்டிருந்தனர்.[2]
Remove ads
மகாபாரதத்தில் கீடகர்கள்
குருச்சேத்திரப் போர்க் களத்தில் ஆபீரர்கள், சூரசேனர்கள், சிவிக்கள், சால்வர்கள், மத்சயர்கள், திரிகர்த்த நாட்டவர்கள், கேகயர்கள், சௌவீரர்கள் மற்றும் கீகட நாட்டு வீர்ர்கள் எனப் பனிரெண்டு நாட்டு படைவீரர்கள் கௌரவர் படையணியில் சேர்ந்து பீஷ்மரின் உயிரின் பாதுகாப்பிற்காக பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டனர் என மகாபாரத இதிகாசத்தில் பீஷ்ம பர்வத்தில் குறிக்கப்பட்டுள்ளது. (மகாபாரதம், பீஷ்ம பருவம், 6:18)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads