குட்டைக்காது ஆந்தை

From Wikipedia, the free encyclopedia

குட்டைக்காது ஆந்தை
Remove ads

குட்டைக்காது ஆந்தை (short-eared owl, Asio flammeus) என்பது இசுட்ரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆந்தை ஆகும். இவை திறந்த புல்வெளிகளில் காணப்படும்.[2]

விரைவான உண்மைகள் குட்டைக்காது ஆந்தை, காப்பு நிலை ...
Remove ads

உடலமைப்பு

38 செ.மீ. - வட்ட வடிவமான வெளிர் பழுப்பு நிற முகம் கொண்டது. தலையில் கண்களுக்கு மேலாக மிகக் குறுகிய காதுத் தூவிகள் விறைந்து நிற்கும். உடலின் மேற்பகுதி கரும் பழுப்பு நிறக் கோடுகள் கொண்டிருக்க இறக்கைகளும் வாலும் செம்பழுப்பும் கருப்புமான பட்டைகளைக் கொண்டது. மேல்மார்பு மெல்லிய கரும்பழுப்புக் கோடுகளைக் கொண்டிருக்க வயிறு கீற்றுகள் அற்ற வெளிர் பழுப்பானது.

காணப்படும் பகுதிகள், உணவு

குளிர் காலத்தில் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களைச் சார்ந்த மலைகளுக்கும் மலை சார்ந்த காடுகளுக்கும் வலசை வருவது, தனித்தும் சிறு குழுவாகவும் தரையில் புல் விடையேயும் புதர்களின் ஓரமாகவும் பகலில் அமர்ந்திருக்கும். இது காலை மாலை நேரங்களில் சுறு சுறுப்பாக வயல் எலி, சுண்டெலி, சிறு பறவைகள், தத்துக்கிளி, புழுபூச்சிகள் ஆகியவற்றை இரையாகத் தேடும். காக்கைகளும் பிற பறவைகும் கூட்டமாகத் துரத்தும்போது உயர எழுந்து வட்டமடித்துப் பறக்கும் வலசை வரும் சமயத்தில் குரலொலி ஏதும் செய்வதில்லை.[3]

Remove ads

படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads