குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் (Kuthambakkam Moffesil Bus Terminal) என்பது இந்தியாவின், சென்னையில் உள்ள சென்னை - பெங்களூரு சாலை மீது 24.8 ஏக்கர்கள் (100,000 m2) பரப்பளவில் அமைந்துள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாகும்.[1] [2] இது கோயம்பேடு நகரிலுள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 2019 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது.
இந்த பேருந்து நிலையத்திலிருந்து, வட மற்றும் மேற்கு தமிழகம், கர்நாடக மற்றும் கேரளா மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுக்கின்றன. குறிப்பாக ஆரணி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, குடியாத்தம், தர்மபுரி, சேலம், ஓசூர், பெங்களூரு, மைசூர், சித்தூர் மற்றும் திருப்பதி போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன. இது ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஆகும். இங்கிருந்து புறநகர் அரசாங்க பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது
Remove ads
காலக்கோடு
கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் 2012 ஏப்ரல் 30 ஆம் தேதி, அன்றைய முதல்வர் ஜெயலலிதா புதிய பேருந்து நிலைய திட்டத்தை அறிவித்தார். முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் திருமழிசை மண்டலத்தில் அமைந்திருக்கிறது.
பேருந்து நிலையத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 ஏக்கர் நிலம், இந்தியாவின் தொல்பொருள் ஆய்வகத்தினால் பாதுகாக்கப்படும் மற்றும் தடைசெய்யப்பட்ட இடத்தின் அருகிலுள்ளது. புதிய பேருந்து நிலையத்திற்கு, 2019 பிப்ரவரி 22 அன்று அன்றைய முதலமைச்சர் எடப்பாடி க. பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். [3]முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் ₹ 394 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த திட்டத்திற்கான வடிவமைப்பு மற்றும் பொறியியல் ஆலோசனை நிறுவனம், சி.ஆர் நாராயண ராவ் (கன்சல்டன்ஸ்) பிரைவேட் லிமிடெட் ஆகும்.
Remove ads
வசதிகள்
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.393.74 கோடி செலவில் திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தில் 29.5 ஏக்கர் பரப்பளவில் இம்முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து முனையம் 6.4 இலட்சம்சதுரஅடி பரப்பளவில் 2 தரைகீழ்தளங்கள், தரைதளம் மற்றும் முதல்தளத்துடன் ஐவிரல் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 130 அரசுபேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும் அளவிலும் 3.99 ஏக்கர் பரப்பளவில் 300 பேருந்துகள் துணை உறைவிட நிறுத்தமிடம், 1.99 ஏக்கர் பரப்பளவில் 275 தானுந்துகள், 3582 இரு சக்கர வாகன நிறுத்தம் என 28.25 ஏக்கர்பரப்பளவில் வாகன நிறுத்துமிடம்,கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைவைகளும் அமைக்கப்பட்டுள்ளன.[4][5]
- மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தளவு உயரம் கொண்ட பயணச்சீட்டு பெறுமிடங்கள், தொடு உணர் தரைப்பகுதி, மின்கலன் மூலம் இயக்கப்படும் கார்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் தனி கழிவறைகள்
- தாய்மார்கள், குழந்தைகளுக்கு பாலூட்டிட அறைகள்,
- தரை தளத்தில் 53 கடைகள் மற்றும் 2 உணவகங்கள், துரித உணவு மையம்
- முதல் தளத்தில் 47 கடைகள் மற்றும் 2 உணவகங்கள், துரித உணவு மையம், ஏடிஎம் வசதி, தனி மருத்துவமனை
- இலவச மருத்துவ மையம், போக்குவரத்து அலுவலகம், நேரக் குறிப்பாளர் அலுவலகம்
- ஆண்கள், பெண்கள், மற்றும் திருநங்கைகளுக்கான கழிவறைகள்
- குடிநீர் வசதி, மின்விசிறிகள், இருக்கைகள், சூழல் வரைபடங்கள் வசதியுடன் பேருந்து நிறுத்துமிட அமைப்பு
- பயணிகளுக்காக 100 ஆண்கள், 40 பெண்கள் மற்றும் 340 ஓட்டுநர்களுக்கான படுக்கை வசதி கொண்ட ஓய்வறைகள்
- 2 நகரும் படிக்கட்டுக்கள், பயணிகளுக்கான 8 மின்தூக்கிகள் மற்றும் 2 சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கான மின்தூக்கிகள்
- இரண்டு அடித்தளங்களில் 2,769 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 324 இலகு ரக வாகன நிறுத்தும் வசதிகள்
- 2000 கேவிஏ மின் மாற்றிகள் மற்றும் மின் ஆக்கிகளுடன் கூடிய துணை மின் நிலையம் மற்றும் இதர மின் கட்டமைப்பு வசதிகள்
- 9 கழிவறை தொகுதிகளை தூய்மையாக்கவும், செடிகளுக்கு நீர் பாய்ச்சவும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் நாளொன்றுக்கு 650 கி.லி. கொள்ளளவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
- குடிநீர் வசதிக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நாளொன்றுக்கு 0.5 மில்லியன் லிட்டருடன் கூடுதலாக நிலத்தடி நீரை சுத்திகரிக்கும், 300 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள எதிர் சவ்வூடுபரவல் முறையிலான நீர் சுத்திகரிப்பு நிலையம்
- பணிமனை/பராமரிப்பிடங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், மூத்த குடிமக்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டிற்காக 5 மின்கல ஊர்தி வசதி
- முனையத்தின் முகப்பில் 6 ஏக்கர் பரப்பளவில் நீரூற்றுகளுடைய நடைபாதைகள் கொண்ட பூங்கா,
- முனையத்தின் முகப்பில் ஆட்டோ, டாக்ஸி நிறுத்தத்திற்கு தனியாக இடம்
- நீர் வழங்கல், மின்சாரம் மற்றும் தீயணைப்பு, அடித்தள காற்றோட்டம் ஆகியவற்றோடு
- முக அடையாளம் காட்டும் கேமராக்கள் போன்றவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்புமுறை வசதி போன்ற பயணிகளுக்கும், ஓட்டுனர்களுக்கும், வாகனங்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads