கும்டா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குமட்டா, இந்திய மாநிலமான கர்நாடகத்தின் வடகன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இதே பெயரிலுள்ள வட்டத்தின் தலைநகரம் ஆகும்.[1] இங்கிருந்து 142 கி.மீ தொலைவு சென்றால் மட்காவ் என்ற நகரத்தையும், 58 கி.மீ தொலைவு சென்றால் பட்கல் என்ற நகரத்தையும் அடையலாம். மும்பைக்கும் மங்களூருக்கும் இடையேயான கொங்கண் இருப்புப்பாதையில் உள்ள முக்கிய நிலையங்களில் இந்த ஊரின் தொடர்வண்டி நிலையமும் ஒன்று.
Remove ads
போக்குவரத்து
சாலைவழி
கர்நாடக அரசுப் பேருந்துகள் இங்கிருந்து கர்நாடகத்தின் மற்ற ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை 17ன் வழியாக சென்றால் மும்பை, பன்வேல், இரத்தினகிரி, மட்காவ், கார்வார், பட்கல், குந்தாபுரா (கர்நாடகம்), உடுப்பி, மங்களூர், இடப்பள்ளி ஆகிய ஊர்களை சென்றடையலாம்.
இருப்புவழி
இங்கிருந்து தொடர்வண்டி மூலமாக தில்லி, மும்பை, அகமதாபாத், மங்களூர், திருவனந்தபுரம், மட்காவ், போபால், கார்வார், மங்களூர், பெங்களூர், மைசூர், எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களை சென்றடையலாம்..
Remove ads
அமைவிடம்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads