நாம் இருவர் (1947 திரைப்படம்)

அவிச்சி மெய்யப்பச் செட்டியார் இயக்கத்தில் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நாம் இருவர் (1947 திரைப்படம்)
Remove ads

நாம் இருவர் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

விரைவான உண்மைகள் நாம் இருவர், இயக்கம் ...

தமிழ்த் திரைப்படங்களில் நாட்டுப்பற்று பொங்கி வழிந்த காலம் அது. அச்சமயம் ஏ. வி. மெய்யப்பன் நாட்டுப் பற்று உணர்ச்சிமிக்க கதையைத் தேடிக்கொண்டிருந்தார். என். எஸ். கிருஷ்ணனின் நாடகக் குழுவினர் நடத்திவந்த தியாக உள்ளம் என்ற நாடகம் அவரின் கவனத்தைக் கவர்ந்தது. எனவே அந்த நாடகத்தின் உரிமையை வாங்கி நாம் இருவர் என்ற பெயரில் திரைப்படமாக முடிவு செய்தார். நாடகத்தில் நாயகனாக நடித்த எஸ். வி. சகஸ்ரநாமத்தையே படத்திலும் நாயகனாக்க ஒப்பந்தம் செய்தார்.

அந்த நேரத்தில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என். எஸ். கிருஷ்ணன் சிக்கியிருந்ததால் அவரின் நாடகக்குழுவை ஏற்று நடத்தும் முழு பொறுப்பும் எஸ். வி. சகஸ்ரநாமத்தின் தோளில் விழுந்தது. இதனால் நாம் இருவர் படத்தின் படப்பிடிப்புக்கு வந்து சேர அவரால் இயலவில்லை. நிலமையை உணர்ந்த ஏ. வி. மெய்யப்பன் டி. ஆர். மகாலிங்கத்தை படத்தில் நாயகனாக்கினார். இப்படம் வசூலில் சாதனை படைத்தது.[1]

Remove ads

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads