கும்ஹரார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கும்ஹரார் அல்லது கும்ரஹார் (Kumhrar or Kumrahar), இந்தியாவின் பிகார் மாநிலத்தலைநகரான பாட்னா மாநகராட்சிக்குட்பட்ட, பண்டைய பாடலிபுத்திரம் நகரத்தின் சிதிலமைடைந்த தொல்லியல் அகழ்வாய்வு களமாகும். கும்ஹரார் தொல்லியல் களம், பாட்னா தொடருந்து நிலையத்திலிருந்து கிழக்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1]
கும்ஹரார் பகுதியை அகழ்வாய்வு செய்த போது, மௌரியப் பேரரசு (கிமு322–185) காலத்திய தியான மண்டபக் கூரையின் மேற்பரப்பைத் தாங்கும் 80 தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அகழ்வாய்வில் பாடாலிபுத்திரத்தின் கும்ஹாரர் தொல்லியல் களம் கிமு 600 ஆண்டுகளுக்கு முந்தியது எனக் கண்டறிந்துள்ளனர்.[2] மேலும் கும்ஹரார் தொல்லியல் களம் மௌரியப் பேரரசர்களான அஜாதசத்ரு, சந்திரகுப்த மௌரியர் மற்றும் அசோகர் ஆகியவர்களின் பண்டையத் தலைநகரங்களாக விளங்கியது. கும்ஹரார் பகுதி கிமு 600 முதல் கிபி 600 முடிய புகழுடன் விளங்கியது.[2]
Remove ads
80 தூண் மண்டபம்
மௌரியர் காலத்திய கும்ஹரார் தொல்லியல் களத்தின் தூண்கள் எட்டு வரிசைகளாகவும், வரிச்சைக்கு பத்து தூண்கள் வீதம் 80 தூண்கள் கொண்டிருந்தது. ஒன்றிற்கொன்று 4.57 மீட்டர் இடைவெளியுடன் கூடிய, மணற்கல்லான இத்தூண்கள் 9.75 மீட்டர் உயரம் கொண்டது. அதில் 2.74 மீட்டர் நிலத்தடியில் உள்ளது. இந்த என்பது தூண்களும் ஒரு மண்டபத்தின் கூரையைத் தாங்கி நிற்கும் வண்னம் அமைக்கப்பெற்றிருந்தது.[3][4][5]
- சிதிலமைடைந்த 80 தூண்கள் கொண்ட மண்டபத்தின் மாதிரி வரைபடம்
- 80 தூண்களில் முமுமையாக கிடைத்த ஒரே தூண்
- தூணின் ஒரு பகுதி
Remove ads
பிற கட்டமைப்புகள்

ஆனந்த விகாரை: அகழாய்வில் பௌத்த விகாரத்தின் அஸ்திவார செங்கற்கள், மரத்தூண்கள், களிமண்னால் ஆன உருவங்கள் கிடைத்துள்ளது.[2]
ஆரோக்கிய விகாரை: அகழ்வாய்வின் போது கண்டறிந்த ஆரோக்கிய விகாரத்தில் ஆயுர்வேத மருத்துவ அறிஞரான தன்வந்திரி தலைமையில் மருத்துவ ஆய்வுகள் நடைபெற்றது.[5]
துராக்கிய தேவி கோயில் – 1890ல் நடந்த அகழ்வாய்வில் கிமு 2 – 1ஆம் நூற்றாண்டின் சுங்கர் காலத்திய இரட்டை முகம் கொண்ட துராக்கிய அல்லது துருகி தேவியின் சிற்பத்துடன் கூடிய தூபி கிடைத்துள்ளது.[6]
Remove ads
படக்காட்சியகம்
- மௌரியர் காலத்திய கும்ஹாரரின் கட்டிடங்களின் சிதிலங்கள்
- பாடலிபுத்திரத்தின் கும்ஹரார் தூண்களின் சிதிலங்கள்
- மரப்பலகையினால் ஆன நடைமேடைகள்
- தற்கால பாட்னா நகரத்தில் கும்ஹரார் மற்றும் புலாந்தி தோட்டத்தின் அமைவிடம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads