குருச்சேத்திரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குருச்சேத்திரம் ⓘ (Hindi: कुरुक्षेत्र) இந்துக்களின் இதிகாசத்திலும், வரலாற்றிலும் சிறப்பு பெற்ற இடமாகும். குருச்சேத்திரத்தை, தர்மச்சேத்திரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது இந்தியாவில், அரியானா மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் சண்டிகரிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும், தில்லியிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பாண்டவர் – கௌரவர் படைகளுக்கு இடையே நடந்த குருச்சேத்திரப் போர் இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் குருச்சேத்திரப் போர்க்களத்தில் தான் பகவத் கீதை பிறந்தது.
பாண்டவர்கள் – கௌரவர்களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த குரு எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருச்சேத்திரம் என்று பெயர் பெற்றது என புராணங்கள் கூறுகிறது.
குருச்சேத்திரத்தில் அமைந்த தொன்மை வாய்ந்த புனித பிரம்ம சரோவர் குளம் அமைந்துள்ளது.
Remove ads
குருசேத்திரத்தின் வரலாறு
வாமண புராணம் பரத குல அரசன், குரு என்பவன், சரசுவதி மற்றும் திருஷ்டாவதி நதிக்கரையில் பொ.ஊ.மு. 1900-இல் இந்நகரை அமைத்தான் என்று கூறுகிறது.[1] யக்ஞம், தானம், தவம், வாய்மை, தியாகம், மன்னித்தல், கருணை, மனத்தூய்மை, மற்றும் பிரம்மச்சர்யம் போன்ற நற்பண்புகள் கொண்ட அரசன் ”குரு”வின் மேன்மையை பாராட்டி, பகவான் விஷ்ணு அளித்த இரண்டு வரங்களின்படி, இவ்விடத்தில் இறப்பவர்கள் வீடுபேறு அடைவர். இவ்விடம், பல்வேறு காலகட்டங்களில் உத்தரவேதி என்றும், பிரம்மவேதி என்றும் இறுதியில் பரத குல அரசன் 'குரு'வின் காலத்திலிருந்து குருச்சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
Remove ads
பார்க்க வேண்டிய இடங்கள்
- பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய இரதம் அமைந்த இடம்
- கிருஷ்ணா அருங்காட்சியகம், மகாபாரத காட்சிகள் கொண்ட அருங்காட்சியகம் [2]
- பீஷ்ம குண்டம், பீஷ்மர் வீடுபேறு அடைந்த இடம்
- சோதிசர் அருச்சுனனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதை அருளிய இடம்
- பிரம்ம குண்டம், அருச்சுனன் பீஷ்மருக்கு தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.
- குருசேத்திர அறிவியல் அருங்காட்சியகம்[3]
- கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம்[4]
- பிர்லா மந்திர் [5]
- குருச்சேத்திரம் சிவன் கோயில்
Remove ads
நிலவியல் அமைப்பு
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads