குருச்சேத்திர மாவட்டம்

அரியானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

குருச்சேத்திர மாவட்டம்
Remove ads

குருச்சேத்திர மாவட்டம் (Kurukshetra district) (இந்தி:कुरुक्षेत्र जिला) வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் குருச்சேத்திரம் ஆகும்.

Thumb
அரியானாவில் குருச்சேத்திர மாவட்டத்தின் அமைவிடம்

இந்து தொன்மவியல்

சந்திர குல மன்னர் குரு என்பவர் இவ்விடத்தில் தவமிருந்ததாக கூறுவர். குருச்சேத்திரம் என்பதற்கு குருக்களின் நாடு என்பவர்.

இம்மாவட்டத்தின் குருச்சேத்திரம் என்ற இடத்தில் பாண்டவர்களுக்கும் - கௌரவர்களுக்கும் போர் நடந்ததாக வியாசரின் மகாபாரதம் காவியம் கூறுகிறது. மேலும் இதே இடத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அருச்சுனனுக்கு பகவத் கீதை அருளியதாக கருதப்படுகிறது.

மாவட்ட வரலாறு

அரியானாவின் கர்னால் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 1973-ஆம் ஆண்டில் புதிதாக குருச்சேத்திர மாவட்டம் துவக்கப்பட்ட்து.

உட்கோட்டங்கள் & வட்டங்கள்

குருச்சேத்திர மாவட்டம் தானேசுவரம் பெஹொவா என இரண்டு வருவாய் உட்கோட்டங்களைக் கொண்டது. தானேஸ்வரம் உட்கோட்டம் தானேசுவரம் மற்றும் சகாபாத் என இரண்டு வருவாய் வட்டங்களையும், லாத்வா மற்றும் பாபைன் என இரண்டு துணை வட்டங்களையும் கொண்டது. பெகாவா உட்கோட்டம் பெகாவா வருவாய் வட்டமும், இஸ்மாயில்பாத் என துணை வட்டமும் கொண்டது. பஞ்சாப்பை ஒட்டி அமைந்த இம்மாவட்டத்தில் சீக்கிய மக்கள் தொகை கணிசமாக கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,530 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 964,655 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஆக 16.86% உயர்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 510,976 மற்றும் பெண்கள் 453,679 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 888 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 630 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 76.31% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 83.02% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 68.84% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 116,957 ஆக உள்ளது. நகரப்புற மக்கள் தொகை 28.95% ஆகவும்; கிராமப்புற மக்கள் தொகை 71.05% ஆகவும் உள்ளது. [1]

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 805,175 (83.47 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 15,970 (1.66 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 1,943 (0.20 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 375 (0.04 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 214 (0.02 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 140,395 (14.55 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 106 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 477 (0.05 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழி உடன் பஞ்சாபி மற்றும் அரியான்வி போன்ற வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன.

Remove ads

கல்வி

1956-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குருச்சேத்திர பல்கலைக்கழகம் மற்றும் 1963-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மண்டல பொறியியல் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியன முக்கிய கல்வி நிறுவனங்களாகும்.

பொருளாதாரம்

வேளாண்மையும் சுற்றுலாத் துறையும் இம்மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக உள்ளன.

பார்க்க வேண்டிய இடங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads