குழந்தைகள் தொலைக்காட்சித் தொடர்

குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

குழந்தைகள் தொலைக்காட்சித் தொடர் அல்லது சிறுவர் தொலைக்காட்சித் தொடர் (Children's television series) எனப்படுவது மழலையர் மற்றும் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டு மற்றும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒளிபரப்பு செய்யப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒரு வகை ஆகும். பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் பொழுதுபோக்கு மற்றும் கல்வி சார்ந்த அம்சங்களிலே ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

வரலாறு

சிறுவர் தொலைக்காட்சியும் தொலைக்காட்சியைப் போலவே பழமையானதாகும் [1].1946 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ஒளிபரப்பப்பட்ட குழந்தைகள் நேரம் என்பதை மையமாகக் கொண்டு பிபிசியின் சில்ட்ரன்சு அவர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதுவே குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும் [2]..

குழந்தைகளுக்கான தொலைக்காட்சி வானொலியில் ஒலிபரப்பான இதே போன்ற நிகழ்ச்சிகளிலிருந்து தோன்றியது. பிபிசியின் குழந்தைகள் நேரம் 1922 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது [3]. மற்றும் பிபிசியின் பள்ளி வானொலி என்ற நிகழ்ச்சி 1924 இல் ஒளிபரப்பத் தொடங்கியது. அமெரிக்காவில் 1930 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் லிட்டில் ஆர்பன் அன்னி போன்ற வானொலி நாடகத் தொடர்கள் வெளிவரத் தொடங்கின. பிற்பகலில் குழந்தைகள் வானொலி கேட்பதற்கான நிகழ்ச்சியாக இது மாறியது [4].

தமிழில் முதலில் சன் தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான தொடர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மற்றும் வார நாட்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. விஜய் தொலைக்காட்சியில் மாய மந்திரன், சகல கல பும் பும் போன்ற தொடர்கள் மாலை நேரங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு சுட்டித் தொலைக்காட்சி, கார்ட்டூன் நெட்வொர்க், சித்திரம் தொலைக்காட்சி, சோனி யே, நிக்கெலோடியன் இந்தியா போன்ற குழந்தைளுக்கான தொலைக்காட்சி அலைவரிசைகள் வருகைக்கு பிறகு பல தொடர்கள் மற்றும் இயங்குபடம் தொடர்கள் போன்றவை ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

Remove ads

தொடர்கள்

நிகழ்ச்சிகள்

குழந்தைகளுக்கான தொலைக்காட்சி அலைவரிசைகள்

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads