கூலிம் மாவட்டம்

மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கூலிம் மாவட்டம்map
Remove ads

கூலிம் மாவட்டம் என்பது (மலாய்:Daerah Kulim; ஆங்கிலம்:Kulim District; சீனம்:居林县) மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் கெடா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் பினாங்கு மாநிலத்தை எல்லையாகக் கொண்டு உள்ளது. பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு கிழக்கே மிக அருகில் (27 km (17 mi)) தொலைவில் உள்ளது.

விரைவான உண்மைகள் கூலிம் மாவட்டம், நாடு ...
Remove ads

பொது

Thumb
பாயா பெசார் அருள்மிகு அன்னை கருமாரியம்மன் ஆலயம்

கூலிம் நகரின் சுதந்திரக் கடிகாரம் (Kulim's independence clock) கெடா சுல்தான் அவர்களால் 1957 செப்டம்பர் 15-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறப்புவிழா கண்டது. அதுவே கூலிம் நகரத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.[2][3]

நிர்வாகப் பிரிவுகள்

கூலிம் மாவட்டம் 15 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[4] கூலிம் மாவட்டத்தைக் கூலிம் நகராட்சி மன்றம் நிர்வகிக்கிறது.

  1. பாகன் சேனா (Bagan Sena)
  2. ஜுஞ்சோங் (Junjung)
  3. காராங்கான் (Karangan)
  4. கெலாடி (Keladi)
  5. கூலிம் நகரம் (Kulim Town)
  6. லூனாஸ் (Lunas)
  7. மகாங் (Mahang)
  8. நாகாலிலிட் (Nagalilit)
  9. பாடாங் சீனா (Padang China)
  10. பாடாங் மேகா (Padang Meha)
  11. செடிம் (Sedim)
  12. சிடாம் கானான் (Sidam Kanan)
  13. சுங்கை செலுவாங் (Sungai Seluang)
  14. சுங்கை உலார் (Sungai Ular)
  15. தெராப் (Terap)
Remove ads

கூலிம் உயர் தொழில்நுட்பத்துறை பூங்கா

கூலிம் மாவட்டம் தற்போது அதன் கூலிம் உயர் தொழில்நுட்பத்துறை பூங்காவால் (Kulim Hi-Tech Park) மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. இந்தப் பூங்கா வளாகம் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான ஒரு தொழில்துறைப் பூங்காவாகும். 1996-இல் திறக்கப்பட்டது.

தவிர மலேசியாவின் முதல் உயர் தொழில்நுட்ப தொழில்துறை பூங்காவாக மாறியது. இந்த மையத்தின் பரப்பளவு 14.5 சதுர கீலோமீட்டர் ஆகும்.[5]

வெளிநாட்டு நிறுவனங்கள்

இங்கே இன்டெல் (Intel), எந்தகிரிஸ் (Entegris), பூஜி (Fuji Electric), சில் தெரா (SilTerra), இன்பினோன் (Infineon), பர்ஸ்ட் சோலார் (First Solar), ஏ.ஐ.சி பகுதிக் கடத்தி (AIC Semiconductor), ஷோவா டென்கோ (Showa Denko) போன்ற வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்கள் தத்தம் தொழிற்சாலைகளைத் தோற்றுவித்துச் செயல்பட்டு வருகின்றன.[6]

2019 மார்ச் மாதம், கூலிம் அனைத்துலக விமான நிலையத்தை உருவாக்குவதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பட்டது. அதற்காக ரிங்கிட் 1.6 பில்லியன் (380 மில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்ய நடுவண் அரசு ஒப்புதலைத் தெரிவித்தது.[7]

மலேசிய நாடாளுமன்றம்

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கூலிம் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், தொகுதி ...

கெடா மாநிலச் சட்டமன்றம்

கெடா மாநிலச் சட்டமன்றத்தில் கூலிம் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், மாநிலம் ...
Remove ads

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads