கெட்டிசுபெர்க்கு, பென்சில்வேனியா

From Wikipedia, the free encyclopedia

கெட்டிசுபெர்க்கு, பென்சில்வேனியா
Remove ads

கெட்டிசுபெர்க்கு (Gettysburg) ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் பரோ ஆகும். இது ஆடம்சு கவுண்டியின் தலைநகராகவும் விளங்குகிறது.[2] 1863ஆம் ஆண்டு நிகழ்ந்த கெட்டிசுபெர்க்கு சண்டைக்காகவும் அப்போதையக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனின் கெட்டிசுபெர்க்கு உரைக்காகவும் இந்நகரம் அறியப்படுகிறது. இங்குள்ள கெட்டிசுபெர்க்கு தேசிய சண்டைக்களம், தேசிய இராணுவப் பூங்கா ஆகியவற்றிற்கு பெருந்திரளாக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். 2010 அமெரிக்கக் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 7,620 ஆகும்.[3]

விரைவான உண்மைகள் கெட்டிசுபெர்க்கு, பென்சில்வேனியா, நாடு ...
Remove ads

வரலாறு

அயர்லாந்தில் பிறந்த ஜேம்சு கெட்டிசு (1759-1815) என்பவரால் 1786ஆம் ஆண்டு இங்கு குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டது; தம்மால் நிறுவப்பட்ட குடியேற்றத்திற்கு கெட்டிசுடவுன் எனப் பெயரிட்டார். 1800இல் இது கெட்டிசுபெர்க்கு என மறுபெயரிடப்பட்டது. மேலும் இப்பகுதி ஆடம்சு கவுண்டி எனப் பெயரிடப்பட்டது.

Thumb
கெட்டிசுபெர்க்கு சண்டையில் உயிரிழந்தவர்களின் கல்லறைத் தோட்டம்
Thumb
கெட்டிசுபெர்க்கு மங்கா ஒளி அமைதி நினைவகம்

இந்தவிடத்தில்தான் அமெரிக்க உள்நாட்டுப் போரின் அறுதிச் சண்டைகளில் ஒன்றாக 1863ஆம் ஆண்டில் சூலை 1 முதல் 3 வரை பெரும் சண்டை நிகழ்ந்தது. ஏறத்தாழ 6000 பேர் உயிரிழந்தனர்; 27,000க்கும் மேலானோர் காயமுற்றனர். நவம்பர் 19, 1863 அன்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் புதிய கல்லறையை துவக்கி விழாவின் இறுதியில் ஏறக்குறைய மூன்று நிமிடங்களுக்கு உரையாற்றினார்; கெட்டிசுபெர்க்கு உரை என இன்று அறியப்படும் இந்த உரை அமெரிக்க வரலாற்றில் மிகச்சிறந்த உரைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இங்கு நடைபெற்ற சண்டையின் ஐம்பதாவதாண்டு விழா 1913இல் கொண்டாடப்பட்டது. சூலை 3, 1938இல் 75ஆம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் [ பிராங்க்ளின் டெலனோ ரூசவெல்ட்டு 250,000 பார்வையாளர்கள் முன்னிலையில் "மங்கா ஒளி அமைதி நினைவகத்தை" திறந்து வைத்தார்.

மற்றொரு அமெரிக்கக் குடியரசுத் தலைவரான டுவைட் டி. ஐசனாவர் தமது ஓய்வுக்கால வசிப்பிடமாக கெட்டிசுபெர்க்கில் பண்ணை ஒன்றை 1950இல் வாங்கியுள்ளார். சோவியத் ஒன்றியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் 1959இல் இங்கு வருகை புரிந்தார்.

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads