கெமாயான் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெமாயான் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kemayan Railway Station மலாய்: Stesen Keretapi Kemayan); சீனம்: 金马士站) என்பது தீபகற்ப மலேசியா, பகாங், பெரா மாவட்டம், கெமாயான் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கெமாயான் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடத்தில் (KTM East Coast Railway Line) இந்த நிலையம் அமைகிறது. மலேசியாவில் மிக அமைதியான; அதிகம் நடமாட்டம் இல்லாத தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.
Remove ads
தொடருந்து சேவைகள்
இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) தொடருந்து சேவைகளை வழங்கி வருகிறது. தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரை பகுதியின் கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் தொடருந்து நிலையம் தொடங்கி நெகிரி செம்பிலான் கிம்மாஸ் தொடருந்து நிலையம் (Tumpat–Gemas) வரையிலான நிலையங்களில் இருந்து வரும் தொடருந்துகள் இந்த கெமாயான் நிலையத்தைக் கடந்து செல்கின்றன.
Remove ads
கெமாயான் நகரம்
கெமாயான் (Kemayan) நகரம் பகாங் மாநிலத்தின் பெரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்.
நெகிரி செம்பிலான், பகாவ் நகரத்தில் இருந்து பகாங், தெமர்லோ நகரத்திற்கு செல்லும் வழியில் கெமாயான் நகரம் உள்ளது. அங்கு இருந்து கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை வழியாக குவாந்தான் நகரத்திற்குச் செல்லலாம்.
பெரா நன்னீர் ஏரி
மலேசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான பெரா ஏரி (Lake Bera) இந்த நகரத்திற்கு அருகில் உள்ளது. 1994 நவம்பர் மாதம் முதல் ராம்சர் உடன்படிக்கையின் கீழ் அந்த ஏரி பாதுகாக்கப் படுகிறது.
அந்த ஏரியின் பெயரே இந்த நகரத்திற்கும் வைக்கப்பட்டது. பெரா ஏரிப் பகுதியில் செமலாய் (Semelai) எனும் ஒராங் அஸ்லி பழங்குடியினர் வாழ்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, பெரா அதன் பெயரை ரெபா (Reba) எனப்படும் ஒரு வகை கடல் பாசியில் இருந்து பெறப்பட்டது.
கெமாயான் நகரின் அதிகமான அளவில் சீனர்கள் வாழ்கிறார்கள். அதற்கும் அடுத்த நிலையில் தமிழர்கள் உள்ளார். இந்த நகரத்தைச் சுற்றிலும் பல பெல்டா (Felda) நிலக் குடியேற்றத் திட்டங்கள் உள்ளன. அங்குள்ள ரப்பர், எண்ணெய்ப்பனை தோட்டங்களில் கணிசமான அளவிற்குத் தமிழர்கள் தொழில் செய்கிறார்கள்.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads