கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: KLCC LRT Station; மலாய்: Stesen KLCC; சீனம்: 城中城站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.
இந்த எல்ஆர்டி நிலையம், அம்பாங் சாலையின் அவென்யூ கே (Avenue K) என்ற வணிக வளாகத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை சூரியா கேஎல்சிசி (Suria KLCC) எனும் வணிக வளாகத்துடன் ஒரு பாதசாரி சுரங்கப்பாதை இணைக்கிறது; மற்றும் பெட்ரோனாஸ் கோபுரங்கள், மெக்சிஸ் கோபுரம் (Maxis Tower), கோலாலம்பூர் மாநாட்டு மையம் (Kuala Lumpur Convention Centre) ஆகியவற்றை உள்ளடக்கிய கோலாலம்பூர் மாநகர மையம் வளர்ச்சிப் பகுதிகளையும் இணைக்கிறது.
Remove ads
பொது
கோலாலம்பூர் மாநகர மையத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளது. மேலும் மாநகரின் பல அடையாளங்களுக்கு மிக அருகிலும் உள்ளது. இது இலகுத் தொடருந்து அமைப்பில் மிகவும் பரபரப்பான நிலையங்களில் ஒன்றாகும். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் நிரம்பி வழிவது வழக்கம்.
இந்த எல்ஆர்டி நிலையத்திற்கு அருகில் மற்றும் ஒரு நிலையம் உள்ளது. அந்த நிலையம் அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
Remove ads
அமைவு
சனவரி 2012-இல், புக்கிட் பிந்தாங்கில் உள்ள பெட்ரோனாஸ் கோபுரங்களையும் கோலாலம்பூர் பெவிலியன் வணிக வளாகத்தையும் (Pavilion Kuala Lumpur) இணைக்கும் ஒரு பாதசாரி நடைபாதை சேர்க்கப்பட்டது.
அந்தப் பாதசாரி நடைபாதை, MR7 ராஜா சூலான் மோனோரெயில் நிலையம், MR6 புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம் மற்றும் KA18A புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையத்துடன் இணைக்கிறது.
கோலாலம்பூர் மாநகர மையம்
கோலாலம்பூர் மாநகர மையத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் மூன்று நிலைகளைக் கொண்ட ஒரு நிலத்தடி நிலையமாகும்: தரை நிலை, தொடருந்து பயன்பாட்டு நிலை மற்றும் மேடை நிலை. கிளானா ஜெயா வழித்தடத்தின் சேவைக்காக இந்த நிலையத்தில் ஒருதீவு நடைமேடையும் உள்ளது.
அனைத்து அடுக்குகளிலும் படிக்கட்டுகள், மின்படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுமையுந்துகள் உள்ளன. அத்துடன் இரு திசைகளின் வழியாகப் பயணிக்கும் தொடருந்துகளுக்கு என தனிப்பட்ட ஒரு தீவு நடைமேடையையும் இந்த நிலையம் பயன்படுத்துகிறது. நவீன முறையிலான மழை வெயில் தடுப்பு கூரைகளால் இந்த நிலையம் கட்டப்பட்டு உள்ளது.
Remove ads
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads