கே. ஏ. செங்கோட்டையன்
அதிமுக அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. ஏ. செங்கோட்டையன், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]
செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக 1977-ல் சத்தியமங்கலத்திலிருந்தும்,[2] அதன் பிறகு எட்டு முறை கோபிச்செட்டிபாளையத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக செயலலிதா அணி, சானகி அணி என பிரிந்திருந்த போது செயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வென்றார். தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத்தில் வனத்துறை அமைச்சராகவும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார்.[3] தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தில் விவசாயத் துறை அமைச்சராகவும், பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், அதையடுத்து வருவாய்த் துறை அமைச்சராகவும் பணியாற்றி வந்தார்.[4][5]்
Remove ads
சர்ச்சைகள்
செங்கோட்டையனின் மனைவி ஈஸ்வரியும், அவரது மகன் கதிரீஸ்வரனும், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து,” செங்கோட்டையன் வீட்டுக்கே வருவதில்லை; தனது பி.ஏ.ஆறுமுகத்தின் வீட்டிலேயே உள்ளார்!” என செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக புகார் கூறியதாகவும், இதையடுத்து ஜெயலலிதா, செங்கோட்டையனை அழைத்து மிகக் கடுமையாக எச்சரித்ததாகவும் அதிமுக வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் செங்கோட்டையனுடனான நெருக்கத்தின் காரணமாக ஆறுமுகம் மற்றும் அவரது தரப்பு நடிகைகள் பானுப்ரியா, சுகன்யாவோடு[6] பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.[7] இதன்பிறகு 2016 டிசம்பர் 5இல் ஜெயலலிதா மறைவு வரை அவர் அமைச்சரவை, கட்சி பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் ஆகியவற்றிலிருந்து புறக்கணிக்கப்பட்டார்.
அவருக்காக உழைத்தவர்கள், பொருள் இழந்தவர்களை கட்சியில் புறக்கணிக்கப்பட்டால் பொருட்படுத்தாமல் உதாசீனப்படுத்திக் கடந்து செல்வார் என்று குற்றச்சாட்டுகள் பல 2021க்குப் பின் வந்தன.[8]இதனால் பலர் திமுகவில் இணைந்தனர்.
Remove ads
பறிபோன முதல்வர் வாய்ப்பு
ஜெயலலிதா மறைவுக்குப் பின் கூவத்தூரில் தமிழக முதல்வர் ஆகும் மூத்தவர் என்ற வாய்ப்பினை செலவு செய்ய இயலாத இக்காரணத்தால் தனது அரசியல் வார்ப்பான எடப்பாடி க.பழனிசாமியிடம் இழந்தார் என்று பேசப்பட்டது.[9][10]
இரண்டாம் எழுச்சி
2017-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எடப்பாடி க. பழனிசாமி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[11] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[12]
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கவேண்டும் என்று கட்சிக் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்த நிலையில்ர 6 செப்டம்பர் 2025 அன்று ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் அதிமுகவின் அமைப்பு செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டார்.
குடும்பம்
செங்கோட்டையனின் தந்தை அர்த்தனாரி, மனைவி ஈசுவரி, மகன் கதிர் ஆவார்கள்.[13]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads