கோட்பிரீட் லைப்னிட்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோட்பிரீடு இலைபுனிட்சு அல்லது கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு, (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு இடாய்ச்சுலாந்திய மெய்யியலாளராவார். இவரின் பெயரை இலீபுநிட்சு என்றும் சொல்வார்கள் மெய்யியலின் வரலாற்றிலும் கணித வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், இலத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலேயே எழுதியுள்ளார்.
சட்டம், தத்துவம் ஆகியவற்றைக் கற்ற இலைபுனிட்சு, இடாய்ச்சுலாந்து நாட்டுப் பிரபுக்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே இங்கிலாந்தில் அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், கணித வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. நியூட்டனுக்குப் வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார்.[10] இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
இவர் 30 ஆண்டு கால யுத்தமுடிவில் சிட்ரிக் லெய்பினிஸ், கத்தரினா ஸ்மக்கிற்கும் 1647ல் 07 மாதம் முதல் நாள் பிறந்தார்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads