கோத்தா இசுகந்தர்
இசுகந்தர் புத்திரி நிர்வாக மையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோத்தா இசுகந்தர் (ஆங்கிலம்: Kota Iskandar அல்லது Johor State New Administrative Centre (JSNAC); மலாய்: Kota Iskandar; ஜாவி: كوتا إسكندر) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நிர்வாக மையம் ஆகும்.
ஜொகூர் மாநில சட்டமன்றம் இந்த நிர்வாக மையத்தில் இருந்து செயல்படுகிறது. இது இசுகந்தர் புத்திரி திட்டத்தின் (Iskandar Puteri Project) முதல் கட்டமாகும். இசுகந்தர் புத்திரி திட்டம் என்பது இசுகந்தர் மலேசியா (Iskandar Malaysia) பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இசுகந்தர் புத்திரி திட்டத்தைச் சகயா சவுகார் (Cahaya Jauhar) எனும் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.[1]
Remove ads
இசுகந்தர் மலேசியா
இசுகந்தர் மலேசியா அல்லது இசுகந்தர் வளர்ச்சி மண்டலம் (மலாய்: Wilayah Pembangunan Iskandar; ஆங்கிலம்: Iskandar Malaysia அல்லது Iskandar Development Region (IDR); என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் அமைந்துள்ள வளர்ச்சி மண்டலம் ஆகும். தெற்கு ஜொகூர் பொருளாதார வளர்ச்சி மண்டலம் (South Johor Economic Region) (சுருக்கம்: SJER) என்றும் அழைக்கப் படுகிறது.[2]
2006 நவம்பர் 6-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இது மலேசியாவின் முதல் பொருளாதார வளர்ச்சி மண்டலம் ஆகும். பல பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்குக் கணிசமான அளவிற்கு வளர்ச்சியை வழங்கும் வகையில் இந்தப் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இசுகந்தர் புத்திரி
இசுகந்தர் மலேசியா சுமார் 2,217 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் ஜொகூர் பாரு, தெற்கு பொந்தியான், கூலாய், பாசீர் கூடாங் மற்றும் ஜொகூர் நிர்வாக மையம் அமைந்துள்ள இசுகந்தர் புத்திரி ஆகியவை அடங்கும்.[3][4]
கோத்தா இசுகந்தர் அதிகாரப் பூர்வமாக 19 ஏப்ரல் 2009-இல் சுல்தான் இசுகந்தரால் (Sultan Iskandar) தொடங்கப்பட்டது. அதே மாதத்தில், 2,200 அரசு ஊழியர்கள் புதிய வளாகத்திற்கு குடிபெயர்ந்தனர்; மற்றும் ஜொகூர் மாநில சட்டமன்றத்திற்கான முதல் அமர்வு, 2009 ஜூன் 19-ஆம் தேதி நடந்தது. பிப்ரவரி 2010-இல், பொது போக்குவரத்து இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[5]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads