கோமஹேன் மாகாணம்

துருக்கியின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

கோமஹேன் மாகாணம்
Remove ads

கோமஹேன் மாகாணம் (Gümüşhane Province, துருக்கியம்: Gümüşhane ili ) என்பது வடக்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகளாகக் கிழக்கே போபர்ட், வடக்கே டிராப்சோன் மேற்கே கீரேசன் மற்றும் எர்சின்கான் ஆகிய மாகாணங்கள் உள்ளன இந்த மாகாணமானது 6,575  கி.மீ² பரப்பளவைக் கொண்டுள்ளது மாகாணத்தின் மக்கள் தொகையானது 2010 ஆண்டய கணக்கின்படி 129,618 ஆகும். 2000 ஆம் ஆண்டில் மாகாண மக்கள் தொகை 186,953 என இருந்தது. கோமஹேன் என்ற பெயருக்கு வெள்ளி வீடு என்று பொருள். இந்த நகரம் சுரங்கங்கள் (வெள்ளி மற்றும் வெண்கலம்) கொண்டிருந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் டிராப்சன் ஏற்றுமதிக்கான மூலமாக இருந்தது. மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் கமுரான் தப்பிலெக் ஆவார். இவர் 27 அக்டோபர் 2019 அன்று நியமிக்கப்பட்டார். [2]

விரைவான உண்மைகள் கோமஹேன் மாகாணம் Gümüşhane ili, நாடு ...

மாகாணத்தின் தலைநகராக கோமஹேன் நகரம் உள்ளது.

Remove ads

நிலவியல்

கோமஹேன் உயரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதன் வடக்கே ஜிகானா-டிராப்ஸன் மலைகளும், தெற்கே ஐமென் மலைகளும், மேற்கில் கீரேசன் மலைகளும், கிழக்கில் புலூர், சோசான் மலைகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகளில் மலையேற்றம் என்பது பிரபலமான விளையாட்டாக உள்ளது. ஜிகானா மலையில் ஸ்கை செண்டர் என்ற மையத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது குளிர்கால விளையாட்டுகளுக்கு நன்கு அறியப்பட்ட சுற்றுலா இடமாகும். இதில் உயர்ந்த சிகரம் அப்துல் மூசா சிகரம் (3331 மீ.) ஆகும். இங்குள்ள காடுகளின் முக்கிய மரங்களாக ஸ்காட்ச் பைன் மற்றும் ஃபிர் போன்றவை உள்ளன. மேலும் இப்பகுதியில் ஏராளமான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. கரன்லாக் கோல், பீ குல்லர், ஆர்ட்டெபெல் கோலே, காரா குல்லர் போன்ற பல ஏரிகள் கவூர்தாஸ் மலையின் உச்சியில் உள்ளன, அவை இயற்கை பூங்காக்களாக பாதுகாக்கப்படுகின்றன. கோமஹேன் மாகாணத்தின் மொத்த பரப்பளவில் 56% மலைப்பிரதேசம்.

Remove ads

வரலாறு

1935 செப்டம்பரில் மூன்றாவது இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் ( உமுமி மெஃபெட்டிக்லிக், யுஎம்) உருவாக்கப்பட்டது. [3] அது 1927 ஜுனில் பிரப்பிக்கபட்ட சட்டமான 1164 ஐ அடிப்படையாகக் கொண்டது. [4] இச்சட்டமானது மக்களை துருக்கியமயமாக்குவதை நோக்கமாக கொண்டு நிறைவேற்றப்பட்டது. [5] இந்த மூன்றாவது இன்ஸ்பெக்டரேட் ஜெனரலில் எர்சுரம், ஆர்ட்வின், ரைஸ், டிராப்ஸன், கார்ஸ் கோமஹேன், எர்சின்கான், ஆரே போன்ற மாகாணங்கள் சேர்க்கபட்டிருந்தன. இது எர்சுரம் நகரில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஜெனரலால் நிர்வகிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் 1952 இல் ஜனநாயகக் கட்சியின் அரசாங்கத்தின் போது கலைக்கப்பட்டது.

Remove ads

மாவட்டங்கள்

கோமஹேன் மாகாணம் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):

  • கோமஹேன்
  • கெல்கிட்
  • கோஸ்
  • கோர்டன்
  • சிரான்
  • டோருல்

பொருளாதாரம்

வரலாற்று ரீதியாக, மாகாணத்தில் வெள்ளி சுரங்கங்கள் இருந்தன. இருப்பினும், காடழிப்பு காரணமாக 1920 க்குள் உற்பத்தி நிறுத்தப்பட்டது. [6]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads